அன்புள்ள ஜெ,
யானைப்போரின் பிரம்மாண்டம் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை விதவிதமான போர்முறைகள்
சொல்லப்பட்டுள்ளன. தண்டு ஏந்திச்சென்று தேர்களை அறையும் யானையின் காட்சி நேற்று பிரமிப்பூட்டியது.
இன்றைக்கு நூறுயானைகளால் கொண்டுவரப்படும் தண்டு ஒரு அலைபோல தாக்கும் காட்சி மூச்சுத்திணறச்
செய்தது. பதற்றத்துடன் தான் அந்தக்காட்சியை வாசித்தேன். அந்த பெருந்தண்டு தோதகத்தி
மரத்தால் செய்யப்பட்டது. [ஈட்டி மரம் என்று விக்கியில்போய் பார்த்து தெரிந்துகொண்டேன்]
அந்த தண்டு அந்த ராணுவத்தை உழுது புரட்டியபடிச் செல்வதும் அதை எதிர்கொண்டு பால்ஹிகர்
ஒற்றை ஆளாக உடைத்துச்செல்வதும் ஒரு கனவுபோல தோன்றிய காட்சிகள். இந்தப்போர் நிகழ்வதுபோல
தோன்றுகிறது. சிலசமயம் கனவாகவும் தோன்றுகிறது
ஜெயராமன்