ஜெ
குறைவாகவே உவமைகள் இருந்தாலும் சில உவமைகள் சில்லிட வைக்கின்றன. கடோத்கஜன் வந்த
வழி ஆற்றில் மலைவெள்ளம் வந்து வற்றிய தடம் போல இருந்தது என்ற வரி. அதை நான் சமீபத்திலே
பார்த்தேன். மென்மையான சிவந்த சேறு.அதில் பாதிபுதைந்துகிடக்கும் மரங்களும் பலவகையான
பொருட்களும். மனிதர்கள் நடந்து உருவான தடங்கள். இங்கே அந்த சிவந்த சேறு ரத்தம் என்றும்
புதைந்துகிடப்பவர்கள் மனிதர்கள் என்றும் நினைக்கும்போது பதைக்கிறது
பாஸ்கர்