Monday, October 15, 2018

கிருதவர்மன்




ஜெ

கிருதவர்மன் இந்திரநீலம் நாவலில் அவமானப்படுத்தப்பட்டு தேரில் நின்றிருக்கும் காட்சி நினைவில் நிற்கிறது. அங்கே அவன் தன் பேராசையாலும் துரோகத்தாலும் அவமானப்பட்டான். ஆனால் இன்று அவன் சொல்வதைப்பார்த்தால் அன்று அவன் கிருஷ்ணனின் இடத்தில் இருந்திருந்தால் கிருதவர்மனை கொன்றிருப்பான். மிச்சம் வைத்திருக்க மாட்டான் என்றுதான். ஆனால் அப்போது அவன் வஞ்சினம் உரைத்துக்கொண்டு கிளம்பிச் செல்கிறான். 

அன்றைக்கே எழுந்த கேள்வி அவ்வளவு பெரிய எதிரியை கிருஷ்ணன் ஏன் சம்பாதிக்கிறார் என்பதுதான். அவனை ஏன் அவர் போகவிடுகிறார்? அதற்கான பதில்தான் இப்போது வருகிறது. இன்று கிருதவர்மன் எதிரியாகி நின்று கிருஷ்ணனை அணுகியறிந்திருக்கிறான். ராவணனும் இரணியனும் பெருமாளை அறிந்ததுபோல அவனும் அறிகிறான். அந்த வாய்ப்பை அவனுக்கு அளிக்கத்தான் அவன் கொல்லப்படவில்லை

சாரங்கன்