Friday, October 19, 2018

சாவு




ஜெ

அசங்கனின் இறப்பு இந்நாவலின் ஓர் உச்சம். அது எதிர்பார்த்திருந்ததுதான். ஆனால் அவன் இறந்த விதம் சோகமானது. அந்தப்பிள்ளைகளுக்கு போர் புரியவே தெரியவில்லை. எந்தப்பயிற்சியும் இல்லை. வெறுமே களப்பலியாக ஆவதற்காகவே கூட்டிவரப்பட்டவர்கள்.

மிகச்சுருக்கமாக வந்தாலும் சினி ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம். கடைசிவரை சிறுவனாகவே உற்சாகமாக வளையவந்து அப்படியே செத்துப்போகிறான். அவன் தன்னுடைய கவசத்தின் நாடாவை சீரமைத்துக்கொண்டே இருப்பது ஒரு குறியீடு. அன்னா கரீனினாவில் அன்னா தன் ஆடையைச் சரியாக்கிக்கொள்வதுஒரு அடையாளம் என்பார்கள். அவனுக்கு அந்தக்கவசம் கொஞ்சம்கூடப்பொருந்தவில்லை. அது அவனுக்குரியதே கிடையாது. ஆகவேதான் அதைச்செய்கிறான்.

அவனுடைய மரணம் அப்படி சட் என்று நடக்கிறது. சும்மா கீரைத்தண்டை வெட்டிவிடுவதைப்போல. அசங்கன் கொஞ்சம் கொஞ்சமாக சாத்யகியாக ஆகிவிடுகிறான். ஏனென்றால் சாத்யகி வெறும் பக்தனாக ஆகி தந்தை அல்லாமலாகிவிடுகிறான். ஆகவே அசங்கன் தன் தம்பியரை அணைத்துக்கொண்டு சாக விரும்புவது இயல்பானதுதான். அசங்கனின் அந்தச்சாவு இந்தப்போரிலேயே கொடூரமான நிகழ்ச்சிகளில் ஒன்று

எஸ்.சாரதா