அன்புள்ள ஜெ
ஒருவாசகர் குறிப்பிட்டிருந்ததுபோல கிருஷ்ணன் அர்ஜுனனை குருவும் வழிகாட்டியுமாக
வந்து சூழ்ந்து நின்று ஆணையிட்டு அந்தப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார் .அது உண்மை.
ஆனால் வெண்முரசில் அந்த உவமையிலே ஒரு குறிப்பு இருக்கிறது. அவர் இரு தூண்களில் இரண்டு
வடிவில் இருக்கிறார். அந்த டைக்காடமி தான் முக்கியமானது என நினைக்கிறேன். அவர் இருவராக
ஆகியிருக்கிறார். பிளவுண்டவராக இருக்கிறார். அவர் எப்படித் தோன்றுகிறார் என்பது பெரிய
ஆச்சரியம்தான். அவருக்கு போர் முக்கியம். அதிலே அவர் படைவீரராகவும் இருக்கிறார். கூடவே
அவர் அவனுக்கு குருவாகவும் இருக்கிறார்
எம்.ராகவேந்திரன்