ஜெ
கொஞ்சம் கொஞ்சமாக அசங்கனின் கதாபாத்திரம் ஒரு முழுமை
நோக்கி வந்தது. அவன் முதலில் ஓர் அண்ணனாக வருகிறான். மெதுவாக தம்பியரின் தந்தையின்
இடத்துக்குச் செல்கிறான். அவன் சௌம்யையை மணம்புரிந்துகொள்கிறான். அங்கே அவன் பணிவான
காதலானாகவும் அவள் அம்மா மாதிரியும் இருக்கிறாள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து
விரிந்து வந்து கடைசியில் அவனுடைய இசையார்வம் சொல்லப்படுகிறது. அதுவும் அவன் சாவதற்கு
முன்பு. அவன் அந்தப்போரில் தன் தந்தைமேல் வெறுப்பு கொள்கிறான். அதைமீறி தந்தைமேல் உள்ள
அன்பு ஜெயிக்கிறது. தந்தைக்காகப்போரிடுகிறான். தந்தைக்காகவே சாகிறான். அவனுடைய சாவு
ஒரு தியாகம் கிடையாது. ஒரு அழிவு மட்டும்தான். வருத்தமான சாவு அது. அந்தப்படுகொலை எப்படி
மெல்லமெல்ல குருசேத்திரத்தில் இயல்பாக நடக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்பதைத்தான் இந்நாவலில்
பார்க்கிறோம்
அருண்