Saturday, October 20, 2018

சிறுகதை



அன்புள்ள ஜெ

திசைதேர் வெள்ளம் -34 மீண்டும் ஒரு அற்புதமான சிறுகதை எனலாம். தன்னளவில் மொழியழகும் முழுமையும் கொண்டது, அதன் அடியில் உள்ளவை பெரும்விரிவு கொண்டவை.

கம்ரனின் ஆசிரியர் சொல்கிறார்:"மானுடருக்குள் எண்ணம்போல யானை முகத்தில் அது திகழ்கிறது. ஒரு கணமும் ஓயாதது, எப்போதும் எதையோ தேடுவது. யானையின் துதிக்கை புண்பட்டால் அது அனைத்தையும் உதறி அக்கணமே காட்டுக்கு மீண்டுவிடுகிறது"

'யோக சித்த விருத்தி நிரோத' என்ற பதஞ்சலி முனிவரின் வரியோடு இதை சேர்த்து வாசிக்கலாம்.

இதே பொருள் வெண்முரசில் பலமுறை வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு நுண்மையாக்கமும் (improvisation) ஒரு புதிய அணித்தொகையும் சேர்த்து கூட்டி தருகிறது வெண்முரசு.

அன்புடன்
மதுசூதனன் சம்பத்