Monday, October 29, 2018

துரியோதனனின் ஞானம்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்றைய (27-10-2018)  வெண்முரசு  பகுதியில் துரியோதனன்  சொல்லும்  ஒவ்வொரு  வரியையும்  கண்ணீரல்லாமல்  படித்து கடக்க  முடியவில்லை
  

இலக்கியத்தின் தேவை என்ன என்று இன்று  நான் புரிந்து  கொண்டேன்அது  வாழ்க்கையை அறியச்செய்வதில்லை,  உணரச் செய்கிறது

ஆதி  முதல்  வெண்முரசு  வாசிக்காமல்  இன்றைய பகுதியை  மட்டும் ஒருவன்  வாசித்தால்  அவனுக்கு துரியனின்  வார்த்தைகளின்  கனம் உறைத்திருக்காது. துரியன்  பிறந்தது  முதல் அணுஅணுவாக  அவனதுவாழ்க்கையும்வெற்றிகளையும்தவிப்புகளையும், எடுத்த  முடிவுகளையும்  அறிந்துதொடர்ந்து வருபவர்களுக்கு  அவன் சொற்களின்  அழுத்தமும்,  அந்த ஞானத்தை  அடைய  அவன்  கொடுத்த  விலையையும் தன்  அனுபவமாகவே  உணர முடிகிறதுஅவன்  பேசியது என்னுள்  வாழும்  ஒரு துளி  தார்த்தராஷ்டரனிடம் தான்


புகை  மண்டலம் கடந்து உள்ளொளி காண வேண்டுமென்ற  பதைப்பு  ஏற்படுகிறது.  யோகத்திற்கு  நிகராகவே  இலக்கியமும்  அமைய  முடியுமென்று கண்டு கொண்டேன்

நன்றி

கிருஷ்ணன் ரவிக்குமார்