உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார் என்றவரியை நானும் நினைத்தேன். பலவகையான வியூகங்கள் போரில் போடப்படுகின்றன. ஆனால் எதிர்த்திசையிலும் அதேபோல போர்வியூகங்களை அமைக்கிறார்கள். அதேபோல கடுமையாகப் போரிடுகிறார்கள். அதோடு அர்ஜுனன் பீஷ்மர் போன்றவர்களை எந்த வியூகமும் கட்டுப்படுத்துவதுமில்லை. அப்ப்டியென்றால் வியூகங்களுக்கு என்ன அர்த்தம்? எந்த அர்த்தமும் கிடையாது. அவை ஒரு முன் திட்டங்கள் மட்டும்தான். எல்லா திட்டமும் போர் ஆரம்பித்ததுமே அப்படியே கலைந்துபோய்விடுகிறது. போர் பெரிய ஒரு கலைவுச்செயல்பாடாகவே நிகழ்கிறது
பாஸ்கர்