Friday, October 19, 2018

போரின் ஒலிகள்அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
        வணக்கம் . இந்த குருஷேத்ர யுத்த நிகழ்வில் போர் குறித்த ஆணைகள் மூங்கில் கழையில் கட்டமைக்கப்பட்ட முரசுமேடையில் அமைந்த முரசுகள் ,முழவுகள் முழக்கங்கள் மூலமாக மற்றும் கழையன் கைகளில் உள்ள கொடிகளின்அசைவில் மூலமாகவும்  உடனுக்கு உடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன . யுத்தத்தின் போக்கை மாற்றிவிடும்வல்லமை கொண்டவைகள் இந்த முரசாணைகள் .ஆம் போர்ப்படை தலைவரின் அரசாணைகளை தனதுமுழக்கத்தினால் கொண்டு செல்லும்  இந்த ஆணைகள் யுத்த வீரர்கள் எங்கு ,யாரை களம் காணவேண்டும் என முடிவுசெய்கின்றன .ஒரு விதத்தில் போரை வழிநடத்துவது இத்தகைய முரசாணைகள் தான் . அது சகுனியின்ஆணையாகட்டும் - ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் செல்கசிகண்டியை எதிர்கொள்க!” ,  “அபிமன்யூ புண்பட்டுள்ளான்!திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் பின்னகர்கின்றனர்பிறை இரண்டாக உடையவிருக்கிறதுபீஷ்மரை எதிர்கொள்க!பீஷ்மரை நிறுத்துக!” என்ற ஆணையாகட்டும் - அனைத்து போர் செய்திகளும்  முழவோசை - ஒலி/சப்தம் வடிவில் தான்பரிமாறப்பட்டன. ‘வெண்முரசு – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36 - அந்த போர்முழவின் ஓசை தாளங்களின்எண்ணிக்கையாலும் அணுக்க விலக்கத்தாலும் விசையாலும் கோல் மாறுபாடுகளாலும் சொல்லென்றாகிறதுஇருமுட்டலும் இரு நீட்டலும் ஒரு முத்தாய்ப்பும் ஒன்றென ஒலிப்பது சாத்யகி எனும் சொல்எண்ணி கணக்கிட்டுசொல்லென்று மொழியாக்கி அத்தாளத்தை புரிந்துகொள்ள இயலாது. . அந்த காலகட்டங்களில் சாதாரண நாட்களில் கூடமுரசுகளின் தாளங்கள் வழியே தகவல் பரிமாற்றம் நடைபெற்றது . திருச்செந்தூரில் முருகன் கோவிலில் பூஜை துவக்கசெய்தியை , சாலை ஓரங்களில்,சரியான  இடைவெளியில் அமைக்கப்பட்ட முரசு மேடைகள் வழியே அதனை மதுரைவரை கொண்டு செல்லும் அளவுக்கு தகவல் பரிமாற்றங்கள் இருந்தன .
அதன் நீட்சியாக மின்னோட்டம் கண்டுபிடிக்கப்பட்டபின்பு ,நவீன கால தகவல் தொடர்பு முறைகளுக்குமுன்னோடியாக மோர்ஸ் குறியீடுகள் Morse Code உருவாக்கம் நடந்தது .முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில்போர் முனையில் யுத்த அசைவுகளை /யுத்த வியூகங்களை பரிமாறிக்கொள்ள மோர்ஸ் குறியீடுகள்பயன்படுத்தப்பட்டன ..புள்ளிகள்சிறு கோடுகள் அவற்றின் இடைவெளிகள் வாயிலாகக் குறியீடுகள்பயன்படுத்தப்பட்டனசாதாரண பொதுமக்களுக்கு டெலிகிராம் எனப்படும் ‘தந்திதுரித சேவை மோர்ஸ் குறியீடுகள்மூலமாக தான் அனுப்பப்பட்டன .இந்தியாவில் அஞ்சல் துறையும்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்தொலைத்தொடர்புநிறுவனமும் இதனை அளித்தன . அடிப்படையில் முரசுகள்  மோர்ஸ் குறியீடுகள் என குறிப்பிட்ட கால அளவுஇடைவெளியில் எத்தனை தடவை முழக்கங்கள் எழுப்புகின்றன என்ற விதத்தில் தகவல் பரிமாற்றம் செய்தன . மோர்ஸ்குறியீடு மின்னோட்டம் சார்ந்தது எனில் முரசு முழக்க குறியீடு தாளத்தை சார்ந்தது .முரசு செய்திகளின் வேகம் காற்றுவெளியில்  சப்தத்தின் வேகத்திற்கு சமம்.( 330 m/s) .ஆனால் மோர்ஸ் குறியீடு வேகம் நொடிக்கு பல கிலோமீட்டர் என்றஅளவில் தந்தி கம்பிகள் மூலமாக பரவும்.
   அஞ்சலக தந்தி அனுப்பும் போது தனிப் பயிற்சி பெற்ற அஞ்சலக ஊழியர் தான்  நாம் தரும் சொல்லாய் /எழுத்தாய்எழும் தகவலை  - மோர்ஸ் குறியீடாக மாற்றி குறிப்பிட்ட அஞ்சலகத்திற்கு அனுப்புவார் .அது போன்றதே முரசுஅறைவோன் முழவு முழக்கங்களாக அவனுக்கு மந்தண செய்தி ஓலைகள் மூலமும் ,கொடியசைவுகள் மூலமும்,வாய்மொழி ஆணைகள் மூலமும் கிடைக்கும் தகவல்களை நீண்ட தூரத்தில் உள்ளவர்களுக்கு முரசு சப்த மொழிகளின்மூலமாக உடனுக்கு உடன் தெரிவிக்கிறார்.
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்