அன்புள்ள ஜெ
சாத்யகியின் மனநிலைகளைச் சொன்ன இரு அத்தியாயங்களும் உலுக்கிவிட்டன. சாத்யகி
மிகச்சாதாரணமானவன். அவனிடம் ஆழமான சிந்தனைகள் இல்லை. அவனை ஒரு வகையான பாமரனாகவே வெண்முரசு
காட்டுகிறது. அவனுடைய மனநிலை பாமரனாக இருந்து மேலே பக்தியையும் அடியில் எளிமையான விலங்குணர்வுகளையும்
கொண்டுள்ளது. அந்த மனநிலைகளால் அவன் அலைக்கழிக்கப்படுகிறான். ஆகவேதான் அந்த எதிர்வினைகள்.
அதிலும் நீரும் நெருப்பும் ஒரே களத்தில் எழும் காட்சிகள் சர்ரியல் தன்மைகொண்டவை.
களமே அந்திவெயிலில் தெரிவது தீப்பற்றி எரிவதுபோல அவனுக்குத்தோன்றுகிறது. ரத்தம் தீயாம
ஆகிவிடுகிறது. உடனே மழை. மழையில் அதே ரத்தம் தண்ணீராக மாறி வழிகிறது. போர்க்களம் கொள்ளும்
இந்த மாற்றம் அவன் அகமனசின் மாற்றமாகவே தெரிகிறது
கொந்தளிப்பான அத்தியாயம் அது
சண்முகம்