Thursday, October 18, 2018

வெண்முரசு நாவல்கள்



அன்புள்ள ஜெ


நேற்று நானும் என் தோழியும் போனில் வெண்முரசு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் இதை வாசிக்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்திரநீலம் முடியும்போதுதான் சேர்ந்துகொண்டோம். தொடர்ச்சியாக வாசிக்கிறோம். புத்தகமாகவும் வாசிக்கிறோம். இவ்வளவு ஆண்டுகள் இத்தனைபெரிய கதையை விடாமல் வாசிக்க எங்களால் முடியும் என்றே நினைத்தது கிடையாது. இன்று நினைத்துப்பார்க்கையில் நம்பவே முடியவில்லை. சிலசமயம் நூல்களை ஒட்டுமொத்தமாகப்பார்க்கையில் உண்மையாகவே இவ்வளவு வாசித்துவிட்டோமா என்ற பிரமிப்புதான் ஏற்படுகிறது.

ஆனால் சமீபத்தில் மழைப்பாடலை மீண்டும் வாசித்தேன். மூன்றே நாளில் வாசித்து முடித்துவிட்டேன். மழைப்பாடலை தொடராக வாசிப்பது வேறு. நூலாக வாசித்தால் அது வேறு ஒரு அனுபவமாக உள்ளது. இப்போது போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் நாவல் முடிந்துவிடும். அதன்பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு வெறுமைதான் இருக்கும். அந்த வெறுமையை ஜெயிப்பதற்கு மீண்டும் இந்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பிப்பதுதான் ஒரே வழி என நினைக்கிறேன்

ஆனந்தி