Monday, October 22, 2018

வைரம்



ஜெ

இன்றுவந்த அத்தியாயத்தில் இளைய யாதவரின் இரக்கமற்ற சமரசமே இல்லாத நிலைபாடு பகீரிடச் செய்தது. ஆனால் அவர் கால்புழுதியை உதறிக்கிளம்பும்போதே அது உறுதியும் ஆகிவிட்டது. தெய்வத்தின் கனிவைப்போலவே அதன் குரூரமும் அளவற்றது என்று சொல்வார்கள். ஆகவே வேறுவழியே இல்லை.வெண்முரசில் ஓரிடத்தில் கிருஷ்ணனை வைரம்போல என்று சொன்னது ஞாபகம் வருகிறது. வைரமும் ஒருமலர்தான். ஒளியும் மென்மையும் கொண்டது. ஆனால் மிக உறுதியும் கொண்டது. அந்த வரியை தேடிபபர்த்தேன் கிடைக்கவில்லை

மகாதேவன்