ஜெ
பாரதப்போர்
தொடங்கியபின்னர் கிருஷ்ணன் பெரும்பாலும் வெறுமேதான் இருக்கிறார். அவர் எதையும்
சொல்வதில்லை. மந்திராலோசனைகளில் கலந்துகொள்ளவுமில்லை. அர்ஜுனன் ஒருமுறைகூட மந்திராலோசனைக்கு
வரவில்லை. ஒரே ஒருமுறைதான் கிருஷ்ணன் சொல்கிறார்
அவியிட்டு தேவர்களை வளர்க்கும் வைதிகர் தங்களைத்தான் வளர்த்துக்கொள்கிறார்கள். மண்ணில் இருந்து ஒரு துளி நெய்யோ அன்னமோ செல்லாவிடினும் தேவர்கள் குறைபடுவதில்லை என்றுணர்க! நீங்கள் அறியும் தேவர் வளரும் பொருட்டே உங்கள் வேள்விகள் இயற்றப்படுகின்றன.https://www.jeyamohan.in/113721#.W8F40XszbIU
இந்தப்போர் ஏதோ கிருஷ்ணனின் நன்மைக்காகச் செய்யப்படுவது
என்ற எண்ணம் இரண்டுமூன்றுநாள் போருக்குப்பின் அனைவருக்கும் வந்துவிட்டிருக்கிறது. மேலும்
எப்போதுமே எழும் ஒரு கேள்வி உண்டு. கிருஷ்ணன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்றால் அவன்
ஏன் இந்தப்போரை நிகழ்த்தவேண்டும்? அவனே எல்லாவற்றையும் செய்ய்வேண்டியதுதானே?
அந்தக்கேள்விக்கான பதில் இதிலுள்ளது. வேள்விகள்
தேவர்களை நோக்கிச் செய்யப்படுகின்றன. ஆனால் அவை தேவர்களின் நலனுக்காகச் செய்யப்படுவதில்லை.
செய்பவர்களின் நன்மைக்காகவே செய்யப்படுகின்றன. அவற்றை மனிதர்கள்தான் செய்துகொள்ளவேண்டும்.
போரை வேள்வி என்று கிருஷ்ணன் சொல்கிறார்
கி. ராஜகோபால்