Thursday, October 18, 2018

சுபகம் பற்றிய கதை



https://www.jeyamohan.in/113975#.W8FehnszbIU
ஜெ,

சுபகம் பற்றிய கதை ஓர் அற்புதமான அனுபவம். ஒரு நாவலுக்குள் வரும் சிறுகதை. அது காட்டுக்குள் இருந்து திரும்பி வரும்போது நிகழ்வது அரிய கவிதையாக இருந்தது. அது வனவிலங்காக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கனிந்து பழகிய விலங்காக உருமாறி அது கம்ரனை அடையாளம் காண்கிறது. அதை தொடுவதுவரை அவனால் அதை அறியமுடியாது என்பதும் ஆளமுடியாது என்பதும் ஆழமான ஒரு அனுபவத்தை அளித்தது. அது மெல்லமெல்ல மீண்டு வரும்போது துதிக்கையால் தான் உலகத்தை அறிகிறது. கம்ரனை ஏற்றுக்கொள்கிறது. வெட்டப்படுவது துதிக்கைதான். சுபகம் வெண்முரசு நாவலில் எப்போதும் நினைவில் நின்றிருக்கும் ஒரு அற்புதமான தனிக்கதாபாத்திரமாக இருக்கும் என நினைக்கிறேன்

எஸ். சரவணக்குமார்