Monday, October 1, 2018

மீறல்




ஜெ

துரியோதனனும் சகோதரர்களும் அவன் சபையும் ஒட்டுமொத்தமாக பீஷ்மரிடம் கோருவது எல்லா அறத்தையும் தாண்டிச்சென்று போர் செய்க என்றுதான். ஆனால் அறம்மீறுந்தோறும் அவர் தோற்றுக்கொண்டிருப்பார் என்பதுதான் திசைதேர் வெள்ளத்தின் கதையே. துரியோதனன் அவர் மீறிச்சென்றால் ஜெயிப்பார் என்றும் போரை முடித்துவைப்பார் என்றும் நினைக்கிறான். ஜயத்ரதனும் பிறரும் பீமன் எல்லையை மீறியதைச் சுட்டிக்காட்டி பீஷ்மர் அதை மீறவேண்டும் என்ரு சொல்கிறார்கள். பீஷ்மர் அதை மறுக்கிறார். ஆனால் அவராலதை மீறாமலிருக்கமுடியாது. ஏனென்றால் ஒரு எண்ணம் வந்துவிட்டால் அது எப்படியோ நடந்தேறிவிடும். அவர் எல்லையை மீறும் சந்தர்ப்பம் கண்டிப்பாக போரில் வரும். போர் என்பதை வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டால் போரின் மனோசாஸ்திரம் சம்பந்தமாக இதிலே வருவதை எல்லாம் வேறுவகையிலே புரிந்துகொள்ளமுடியும்

ராஜ்