அன்பு  ஜெ ,                 
 "கார்கடல் 31 " இதில் "காலஇடங்களுக்கு
அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை
மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை
மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான்.  "          
இக்காட்சிகள் "பத்ரிகாசரமத்தில்" நரநாராயணனாக
இருவரும்  தோற்றமளிப்பதை , மெல்லிய
பனித்தீற்றலாக கடந்தது என்னை !              
            ஆன்மா தானான இன்பத்திலிருந்து
விடுபட்டு  , பரமாத்விற்கு
 தான் அடிமைநிலை யென உணர்ந்து  . அதற்கான தளைகளைத்  தாண்டி  , பேரின்ப வீடெய்தி அடையும் நிலையைக் குறிக்கும் அர்த்த
பஞ்சகத்தை உணர்த்தும் ,  திருமந்திரமெனப்படும்
 எட்டெழுத்து மந்திரத்தை , குரு
ஸ்தானத்திலிருந்து  நரனுக்கு உபதேசித்ததை காட்சி படுத்தி கடந்து சென்றதைக்
கண்டு வியக்கிறேன்.                
                     
              
 இன்ப துன்பங்கள் , விருப்பு
 வெறுப்புக்கள் எனும் இரட்டையைக் கடந்து ,தனது தவத்தாலும் ,ஞானத்தாலும் பேரின்ப நிலையெய்தும் யோகிகள் எனும் வரிகள்
வந்துள்ளது .இதனையே  கைவல்யநிலை யென வைணவம் பேசுகிறது, தன்னைத் தானே அனுபவித்தல். இதற்கு  உதாரணமாக
அரவிந்தரை , எனது தந்தை
 மேற்கோள் காட்டியதும் நினைவில் வந்தது , கண்ணனும்
இக்கேள்வியையே அர்ச்சுனன் முன் வைக்கிறான் என்றே நினைக்கிறேன் .அவனும்
 பேரின்ப  வாழ்வினையும் இழந்து  நிற்க முற்படும்போது , கண்ணனும் எள்ளலுடன்  , " இறப்பின் கணத்திலிருக்கும் நீ யே
! தெரிவு செய்வாய் வாழ்வா ,சாவா என்று உன்
திடமான சொல்லினால் ! என்கிறான். 
ஆனால்  அவனோ , வாழ்வென்று
கவர்ச்சியாக  மணம்  வீசும்  பத்மத்தைப் போன்ற  இவ்வுலக
வாழ்வினையே வேண்டி நிற்க்கின்றான், ஆனால்  வெகு
சூஷ்மமாக வாழ்வென்று மரணமும் , சாவெனும் தொணியில்
 பேரின்ப வாழ்வும் விளக்கப்பட்டுள்ளது இதில்.                        
அன்புடன் ,
செல்வி .அ.

