Monday, January 14, 2019

மனிதவிசித்திரம்



ஜெ

இந்தவரியையை வெண்முரசில் வாசித்தேன்

தான் கீழிறங்குவதை ஒருவன் உணரவே கூடாது. அதைப்போல துயரளிப்பது வேறேதுமில்லை. அதை வெல்ல ஒரே வழி அக்கீழிறங்கலை ஆதரித்துச் சொல்லாடுவதுதான். அதன்பொருட்டு மேலும் கீழிறங்குவதுதான்

இந்த வரி எனக்கு அளித்த திறப்பு மிகப்பெரியது. வாழ்க்கைபற்றிய ஒரு பெரிய புரிதல். என் சொந்த தந்தையைப்பற்றி என் மனசில் இது வரை இருந்துவந்த பெரிய கேள்விக்கு விடை. அவர் ஒரு பெரிய தப்பு செய்தார். அது எவரும் செய்யும் தப்புதான். ஆசைதான் மனிதனை ஆட்டுவிக்கிறது. அந்த தப்புக்கு நியாயம் கற்பிக்க அதை விளக்கி அது சரிதான் என நிரூபிக்க முயன்றார். ஆகவே அதைவிட பெரிய தப்புகள் பலவற்றைச் செய்தார். அவரே அவருக்கே சவால்விட்டு அப்டித்தான் கீழே போவேன் என்ன செய்வே என்று சொல்லிக்கொள்வதுபோல

’மனிதவிசித்திரம்’ என்று புதுமைப்பித்தன் சொல்வார். அதை எழுதுவதுதான் இலக்கியம்

ராஜேஷ் மகாலிங்கம்