அன்புள்ள ஜெ.,
'நீள' கண்ட பறவையைத் தேடி - பதிவிற்கு நன்றி. இவ்வளவு சீக்கிரம் நான் எதிர் பார்க்கவில்லை.
'கார்கடல்' தொடர்ந்து படித்து வருகிறேன். பத்து நாவல்கள் முடித்து விட்டேன். ஒரு முறை எல்லா நாவல்களையும் படித்து முடிப்பதே ஒரு வாசகனின் வாழ்நாள் சாதனைதான். அப்போது எழுதுவதென்றால்..., மலைத்து மாளவில்லை. நான் நினைத்துக்கொள்வேன் தி.ஜானகிராமன் எழுதிய 'நடந்தாய் வாழி காவேரி' யின் இரண்டாம் பாகமாக அல்லது இன்னொரு வடிவமாக , அதே இடங்களுக்கும், அவர் பார்க்கத் தவறிய இடங்களுக்கும் நீங்கள் சென்று ஒரு பயணக்கட்டுரை எழுதுவது போல. நடக்க வாய்ப்புண்டா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்
என் திட்டம் வேறொன்று
வெண்முரசு முடிந்தபின் குமரியில் தொடங்கி இமையம் வரை இந்தியாவை நடந்தே பார்க்கவேண்டும்
ஜெ