Monday, January 21, 2019

ஏழாம் தாமரை



உண்மையில் ஒரே அனல் என்பது சகஸ்ரத்தில் வாழும் மெய்யுணர்வே. அதிலிருந்தே ஆஞ்ஞையும் விசுத்தியும் அனாகதமும் பற்றிக்கொள்கின்றன. அவை எரியும் நெய்யென்றாவதே முதல் மூன்றின் பணி. மூன்று விறகும் நான்கு எரியும் என அதை நூல்கள் சொல்கின்றன என்றவரியை யோக சாஸ்திரமும் மருத்துவமும் எப்படி ஒன்றாகக் கலந்திருந்தன என்பதன் சான்றாகவே நான் எண்ணுகிறேன். இன்றைக்குக்கூட ‘பிழைக்கவேண்டும் என்ற எண்ணம் will எப்படி நோயாளிகளைப் பிழைக்கவைக்கிறது என்று நாங்கள் டாக்டர்கள் பேசிக்கொள்வதுண்டு. அந்த தன்னுணர்வு உச்சமடைந்திருப்பதைத்தான் கடைசியான சக்கரமான சகஸ்ரம் என்கிறோம். அதுதான் சித்தம் பேச்சு நினைப்பு எல்லாமாக ஆகிறது. கடைசி மூன்றும் உடலில் உள்ள காமம் பசி ரத்தம் போன்ற அடிப்படைகள். அவை இரண்டும் சந்திக்கையில்தான் உயிர்கள் வாழ்கின்றன


சாந்தகுமார்