அன்புள்ள ஜெ
ஏகாக்ஷரின் ஒற்றைவிழிப்பார்வை
ஷத்ரியர்கள் –வேதங்களின் கோணத்தில் மகாபாரதப்போரைச் சொல்லப்போகிறது. நடுகற்களின் நிழலில்
சொல்லப்படும் அரக்கர்களின் கதை அங்கிருந்து வேறு அனைவரின் உடல்களுக்குள்ளும் செல்லும்
பார்பாரிகனால் சொல்லப்படுகிறது. நாகர்களின் கதையை வெட்டுண்ட தலை சொல்கிறது. ஏதோ ஒருவகையில்
இதுவும் ஒரு உருவகமாக ஆகும் என நினைக்கிறேன். நாகர்களின் நிலையைச் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.
ஆனால் துல்லியமாக ஆக்கிக்கொள்ள முடியவில்லை
ஜெயராஜ்.