Thursday, January 17, 2019

சொல்தெய்வங்கள்


ஜெ

சொல்லப்படாதவை கருவறைத் தெய்வங்கள்சொற்கள் விழாத்தெய்வங்கள் – என்று ஒருவரி வெண்முரசில் வருகிறது. அற்புதமான பழமொழி என நினைத்தேன். சொற்கள் உத்சவமூர்த்திகள். சொல்லப்படாத அர்த்தம் கர்ப்பகிருஹ மூர்த்தி. உள்ளே இருக்கும் மூர்த்திதான் ஆவாஹனம் செய்யப்பட்டது. அதற்குத்தான் சக்தி. அதற்க்த்தான் எல்லா பூசையும். ஆனால் ஊரெல்லாம் செல்வது உத்சவர்தான். அவரும் உள்ளிருக்கும்தெய்வம்தான். ஆனால் உள்ளிருக்கும் தெய்வத்தால் ஆற்றல் அளிக்கப்பட்டவர். நினைக்க நினைக்கப்பெருகும் பழமொழி. ஆனால் இப்படி ஒரு பழமொழி இருப்பதாகத் தெரியவில்லை. மகபாரதத்திலொ புராணங்களிலோ உள்ளதா?

சுவாமி
அன்புள்ள என்,
நானறிந்தவரை அது எழுத்துப்போக்கில் வந்த வரிதான்
ஜெ