Sunday, January 27, 2019

சிரிப்பு

ஜெ

வெண்முரசில் வரும் பொருளில்லாத சிரிப்புதான் மெய்யாகவே சிரிப்பு போலும் என்ற வரி எனக்கு ஒரு அதிர்ச்சியை அளித்தது. அதை நினைத்துக்கொனே இருந்தேன். நாம் சிரிப்பதற்கு வலுவான அறிவார்ந்த காரணம் வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாம் மனம்விட்டுச் சிரீத்த சந்தர்ப்பங்கள் எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தமையால் அர்த்தமில்லாமல் சிரித்ததுதான். சிரிப்புக்காகவே சிரிப்பு வரும்போதுதான் அதுக்கு ஓர் அர்த்தம் வருகிறது/யோசித்துச் சிரித்தால் புன்னகைதான். அதுவும் கசப்போ துக்கமோ கொண்ட சிரிப்பு அது. நாம் குழந்தைகளாக சிரிப்பதுதான் அர்த்தமில்லாத சிரிப்பு. அல்லது விலங்குகள்போலச் சிரிக்கிறோம். நான் காலேஜில் படிக்கும் காலம் வரைத்தான் அப்படிச் சிரித்தேன்

எஸ்.வித்யா