Monday, January 14, 2019

ஆடிப்பாவைகள் யுத்தம்



அன்புள்ள ஜெயமோகன்
               குருஷேத்திர யுத்தகளத்தில்  ,துரியோதனனின் அணுக்க தோழனும் அங்க அரசனும் ஆகிய சூரியமைந்தன் கர்ணன்,  அம்புப்படுக்கையில் கிடக்கும் குருகுல பிதாமகர் பீஷ்மரிடம் யுத்த களத்தில் படைமுகம்நின்றிட  ஆசிகள் பெற்று விட்டார்கர்ணனின் பிறப்பின் ரகசியம் அறிந்த பீஷ்மர்,கர்ணனை வாழ்த்தும் போதுபூடகமாக பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கர்ணனே மூத்தவன் என வாழ்த்துகிறார் .வெண்முரசு நூல்இருபது – கார்கடல் – 17“நான் பிற எவரையும்விட உன்னிடத்திலேயே மிகுதியான உரிமைஎடுத்துக்கொண்டேன்ஏனெனில் நீ மூத்தவன்பிற அனைவரையும்விட உயர்ந்தவன்உனக்கு உரியஅனைத்தையும் தெய்வங்கள் எங்கோ வகுத்திருக்கும் என்று எண்ணினேன்.” “நீ நானே என்று பீஷ்மர்சொன்னார். “ஆம் என்று கர்ணன் சொன்னான்.உண்மையும் அது தான் ஏனென்றால் பீஷ்மர் மற்றும் கர்ணன்ஆகியோர்  முடியுரிமைக்குரிய மூத்த மைந்தனாக பிறந்தும் அந்த உரிமையின்றி வாழும் நிலை ஏற்பட்டது . முடி துறக்க நேரிட்டது .
மேலும் பீஷ்மர் ஏன் கர்ணனை முதல் பத்து நாள் போரில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தார்என்பதையும் கர்ணனிடம் விளக்குகிறார் .வெண்முரசு நூல் இருபது – கார்கடல் – 17“ “அங்கன் தலைமைகொள்க!” என்று பீஷ்மர் மீண்டும் சொன்னார். “அவன் புவியில் நிகரற்ற வீரன்அவனைஎதிர்கொள்ளவிருப்பவனும் அவ்வாறேஅவர்கள் எதிர்நிற்கலாகாதென்று இதுவரை எண்ணினேன்அதைதவிர்க்க என்னால் இயலாதென்று இப்போது புரிந்துகொண்டேன்அது ஊழெனில் அவ்வாறே நிகழட்டும்.”ஆம்.கர்ணன் -அர்ஜுனன் ஆகியோருக்கிடையான போரை தவிர்க்கவே பீஷ்மர் விரும்பி அதற்காகவே கர்ணன் மீதுசூதன் என கீழ்மை சொற்களை பேசி அவனை யுத்தகளத்தில் இருந்து விலக்கினார்.ஆனால் போரைநிகழ்த்துவது இளைய யாதவர் கிருஷ்ணன்இதோ  பத்தாம் நாள் போரில் சிகண்டியை முன்னிறுத்திஅர்ஜுனன் செய்த போரினால் பீஷ்மர் களம் பட அவரின் இடத்தை நிரப்ப கர்ணன் யுத்தகளம் புகுந்தான்.
                குருஷேத்ர யுத்த களத்தில் சமபலம் பொருந்திய வீரர்களுக்கு இடையான  துவந்த யுத்தங்களும்,சமபலம் இன்றி பொருந்திய  சங்குல யுத்தங்களும் நடந்தன . ஜயத்ரதன் - அபிமன்யு ,பூரிசிரவசு - சாத்யகி,சூரன்பகதத்தன் - கடோத்கஜன் ,துரோணர் - அர்ஜுனன் ,துரியோதனன் - பீமசேனர் ,அஸ்வத்தாமன் - அபிமன்யு,சல்லியர் - சாத்யகி ,சகுனி -சகாதேவன் என சமவீரர்களுக்கிடையான துவந்த யுத்தங்கள் நடந்தன.இத்தகையதுவந்த யுத்தங்களை காண தேவர்கள் வானில் நிற்பார் என்பது சூதனின் பாடல் வரிகளில் உண்டு .மகத அரசன்ஜராசந்தன் மற்றும் துரியோதனனுக்கு இடையே நடக்கும் துவந்த யுத்தம் குறித்த வெண்முரசு – நூல் ஒன்பது– ‘வெய்யோன் – 55  உரைப்பதுவும் அதுவே .“முற்றிலும் நிகர் நிலையில் உள்ள இருமல்லர்கள்தோள்கோக்கையில் விண்ணின் தெய்வங்கள் எழுகின்றனஅவை நமக்கு அருள்க!” என்றான் சூதன் ஒருவன். “கிழக்கே இந்திரனும் சூரியனும் வந்து நிற்கின்றனர்மேற்கே வருணனும் நிருதியும் எழுகின்றனர்தெற்கேயமனும் அக்னியும்வடக்கே குபேரனும் வாயுவும் தோன்றுகின்றனர்வாசுகியும் ஆதிசேடனும் வானில்சுழிக்கின்றனர்திசையானைகள் தங்கள் செவியசைவை நிறுத்தி ஒலிகூர்கின்றனஇங்கு மானுடரில்கைகளாகவும் குருதியாகவும் பகையாகவும் வாழும் அனைத்து தேவர்களும் எழுந்து அவிகொள்கஆம்அவ்வாறே ஆகுக!”.ஆனால் பீமசேனரும் ,அபிமன்யுவும் நிகழ்த்திய சங்குல யுத்தத்தினால் கௌரவரும்,அவர்மைந்தர்களும் சடுதியில் மாண்டனர்.
       ஆனால் மஹாபாரதம் படிக்கும் அனைவருக்கும் சமயுத்தம் என்றால் முதலில் நினைவுக்கு வருவதுகர்ணன் -அர்ஜுனன் இருவருக்கிடையேயான யுத்தமே.ஏனென்றால் கர்ணன் பரசுராமரின் குருநிலையில்தனுர் வேதம் பயின்றவன் .அர்ஜுனன் தனுர் வேதம் பயின்றது துரோணரின் குருநிலை.மேலும் இருவருமேஅஸ்திர சாஸ்திரங்களில் தேர்ச்சியும் ,தெய்வாம்சமும் பொருந்தியவர்கள்.அதை விட மேலான ஓன்றுஉண்டு அது இருவருக்கிடையான திரு உரு மாற்றம் .ஆம் அர்ஜுனனின் ஆடிப்பாவை அம்சமே கர்ணன்.கர்ணனின் ஆடிப்பாவை அம்சமாக உருவானவன் அர்ஜுனன் .கர்ணன் பற்றிய சிந்தனைகளை எண்ணாதஅர்ஜுனனின் நாட்கள் மிகக்குறைவு .அது போன்று  அர்ஜுனனை எண்ணாமல் கர்ணனின் ஒருநாள் பொழுதுகூட கழிந்திராது . வனவாச காலத்தில் பகயட்சர்களின் நிலத்தில் நச்சுப்பொய்கை நீர் அருந்தி அர்ஜுனன்மரிக்கும் வேளையில் அவன் பொய்கையில் கண்டது கர்ணனின் முகத்தை தான் . வெண்முரசு நூல்பதினொன்று – சொல்வளர்காடு – 58  நகுலன் “நீங்கள் பார்த்த முகம் எதுமூத்தவரே?” என்றான்பீமன் திரும்பிநோக்கியபின் வானில் விழிநட்டு ஒன்றும் சொல்லாமல் நடந்தான். “சொல்லுங்கள் மூத்தவரேநீங்கள்நோக்கியது யாரை?” என்றான் சகதேவன். “அவனை என்று பீமன் சொன்னான்அவன் எவரைகுறிப்பிடுகிறான் (துரியோதனன் )என்று புரிந்துகொண்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்நோக்கிக்கொண்டார்கள். “அப்படியென்றால் நீங்கள் நோக்கியது அவரை (கர்ணனை ) அல்லவா?” என்றுஅர்ஜுனனிடம் நகுலன் கேட்டான்அவன் ஆம் என தலையசைத்தான். “நாம் தனியாக எங்கும் போவதில்லைமூத்தவர்களேதுணையாக அவர்களை கொண்டுசெல்கிறோம் என்றான் நகுலன் சிரித்தபடிஇறுக்கம்அகன்று இருவரும் புன்னகை செய்தனர்ஆகவே தான்  கர்ணன் -அர்ஜுனன் பொருதும் யுத்த களம் கூடஒருவன் தனது ஆடிப்பாவையிடம் (முகம் காட்டும் கண்ணாடி ) பொருதும் யுத்தம் தான்.  கர்ணனின்ஆடிப்பிரதிபலிப்பு -ஆடிப்பிம்பம் அர்ஜுனன் .அர்ஜுனனின் ஆடிப்பிரதிபலிப்பு - ஆடிபிம்பம் கர்ணன் .Object/Image relation in mirror reflections ‘வெண்முரசு – நூல் ஒன்று – ‘முதற்கனல் – 43  அக்னிவேசர் குருகுலத்தில்சிகண்டியிடம் அக்னிவேசர் கூறுவது இதை தான் -  களத்தில்  பீஷ்மருக்குமுன் நீ  (சிகண்டி)நிற்கும்போது அவரது ஆடிப்பாவை போலவே தெரியவேண்டும். - இளைஞனேதன்ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.”.இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான்  அர்ஜுனனும் கிருஷ்ணனிடம் கூறுகின்றான் .‘வெண்முரசு – நூல் இருபது – கார்கடல்-19  “இதோ என் முன்நின்றிருப்பது என் வடிவேஎன்றும் என் கனவுகளில் நான் எண்ணி எண்ணி ஏங்கிய தோற்றம்நான் சென்றுசென்று அடையக்கூடும் இடம் என்றார் அர்ஜுனர்ஆம் இதில் யார் பிம்பம் வெற்றி வாகை சூடப்போவதுஎன்பது போரை நடத்தும் இளைய யாதவர் ஏற்கனவே எண்ணி வகுத்த ஊழ்மாற்றவியலாலது .சாதாரணமனிதர்களால் விளங்கவியலாலது. எண்ணவியலாலது.
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி .செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்