அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலில் கர்ணன் போர்களத்திற்குள் வருவது கிறிஸ்துவின் இரண்டாம்வருகைபோல இருக்கிறது.வெளிப்பாடு புஸ்தகத்தில் கிறிஸ்து வரும்பொழுது பூமி அந்தகாரப்படும்,எங்கும் இருள் இருக்கும்,அதில் அவர் வெளிச்சமாய் இறங்கிவருவார் என்று இருக்கிறது. கர்ணன் காட்டில் தங்கத்தேரில் எழுந்து வருவதை துச்சாதனன் பார்க்கும்பொழுது எனக்கு கிறிஸ்துவின் வருகையும் இப்படிதான் இருக்கும் என்று தோன்றியது.அபயத்தின் குரல் கேட்டு நமக்காய் எழுந்து வருபவர்கள் எல்லாம் கிறிஸ்துதானே.எத்தனை லட்சம் கிறிஸ்துக்களால் ஆனது இந்த மானிட வாழ்க்கை. நாம்தான் அவர்களை பயத்தாலோ பிரிவினைகளாலோ, அகங்காரத்தாலோ தள்ளிவைத்துவிட்டு தேவைப்படும்போது அவர்களிடம் கதறுகிறோம்.
ஸ்டீபன்ராஜ்