ஜெ
போர்க்களத்தில்
கர்ணன் எழும்போது மெல்லமெல்ல பாண்டவர்தரப்பிலும் அவனைக்கண்டு வாழ்த்தொலி எழுவதுதான்
மகாபாரதம் என்பது வெறும்போர் அல்ல வேறு ஒரு வெளி என்பதைக் காட்டுகிறது. அந்தவகையான
ஒரு பெரிய விஷயம் எப்போதுமே அங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. மிகப்பெரிய கொந்தளிப்பின்
நடுவிலும் அமுதம் எழுந்துவருகிறது. அர்ஜுனன் கர்ணனை தன்னுடைய மறுவடிவம் என உணரும் இடத்தில்தான்
இந்நாவலின் மையம் இருக்கிறதென தோன்றுகிறது
யுதிஷ்டிரர் அந்த
உச்சத்தை உணரவில்லை. ஆனால் ஆச்சரியம் இல்லை. எப்போதுமே மிகவும் யதார்த்தமானவராகவும்
கற்பனையே இல்லாதவராகவும்தான் அவர் காட்டப்பட்டிருக்கிறார். அவரால் மனம் பொங்கி எழும்
தருணங்களை உணரமுடியாது. அறம் என்பதை பூமியில் வைத்தே புரிந்துகொள்பவர் அவர்
சுவாமி