Monday, January 21, 2019

வரிகள்



ஜெ

வெண்முரசின் வரிகளை குறித்துவைக்கும் வழக்கம் எனக்கு உண்டு. அந்த டைரியை சிலசமயம் புரட்டுவேன். சிலபோது மொத்தக்கதையும் நினைவுக்கு வரும். சிலசமயம் வேறேதோ அர்த்தங்களை அளிக்கும் ஒரு கவிதைவரியாக மனதில் நிற்கும்

எளிமை என்பது ஒளி. விழியற்றோர் அதை அறியமுடியாது. செல்வம் மலைகளைப்போல. விழிமூடி எவரும் அதை புறக்கணிக்கமுடியாது

மாமலரில் வரும் இந்த வரி அழகானது. எளிமை என்பது ஓர் ஒளி, அதை உணரும் கண்களுக்கே அது தெரியும். செல்வம் என்பது மலை. அதை இல்லை என நினைத்தாலும் போய் முட்டிக்கொள்வோம். நினைக்கும்போது என்னென்னவோ தோன்றுகிறது. ஆனால் அந்த வரி மர்மான ஒன்றாகவே நீடிக்கிறது


எஸ்