Thursday, January 17, 2019

துரோணர்அன்புள்ள ஜெயமோகன்
                  ஆச்சாரியர் ,குரு ,ஆசிரியர் ,ஆசான் என அனைத்திற்கும் இலக்கணமாக இன்றுவரை திகழ்பவர்துரோணாச்சாரியார் . அதனால் தான் விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளர்க்கு துரோணாச்சாரியார்விருது வழங்கப்படுகிறது .வில்லுக்கு விஜயன் என்றொரு சிஷ்யன் மூலமாக சிறந்த குருவாகமிளிர்ந்தார்.அத்தகைய துரோணர் அந்தண குலத்தில் உதித்தும் குருஷேத்திர  போரில் வில்லை ஏந்தியதுவிந்தை தான் .ஏனென்றால் போரில் அந்தணர் நிற்க நெறியில்லை.தனுர் வேதம் படைக்கும் சாத்திரம்பெற்றவர், குருஷேத்திர போரில் கௌரவர் அணியில் நிற்க நேர்ந்தது ஊழ் வினைதான்.
பீஷ்மரிடம் ஆசிகள் பெற்ற கர்ணன் மீண்டும் யுத்தகளம் புகும் முன்பு சந்திக்க விழைந்தது துரோணரைதான் .அப்போது துரோணர் கர்ணனிடம் தான் வாழ்வில் நிகழ்த்திய பிழைகளை  உணர்ச்சிப்பூர்வமாகவிளக்குகிறார் .வெண்முரசு நூல் இருபது – கார்கடல் – 18 "யோகிக்கும் அந்தணனுக்கும் அறிஞனுக்கும்கலைஞனுக்கும் அரசென்று ஒன்று இருக்கலாகாது என்றபோது துரோணரின் குரல் தெளிந்தது. “ஆனால்நான் என் வாழ்நாளெல்லாம் அஸ்தினபுரியின் குடைநிழலை நாடினேன்நான் காட்டில் குடிலமைத்துஆசிரியனாக இருந்திருக்கவேண்டும்நான் அடிபிழைத்தவன்என் அச்சமும் வஞ்சமும் விழைவும் அரசைநாடும்படி என்னை தூண்டின.” அவர் முகம் துயர்கொண்டதுஉன்பொருட்டு என் முந்தையோரிடம்நூறுநூறாயிரம் சொற்களில் பிழைபொறுத்தல் கோரினேன்.என்றார் .துரோணரின் உளச்சமநிலைபிறழ்ந்ததற்கு காரணம் புத்திர பாசம் தான் .ஆம் அவர் அசுவத்தாமன் மேல் கொண்ட பற்றுதான்.மஹாபாரதத்தில் வெளிக்காட்டாத புத்திர பாசத்தால் தவறிழைத்தவர்கள் என்றால் அது அரசர்திருதராஷ்டிரர் மற்றும் துரோணர் என்றால் மிகையில்லை .
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல் – 61   பலராமர் அவனை நோக்க புன்னகையுடன்நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள் என்றான்யுதிஷ்டிரர் மைந்தன் யௌதேயன்.ஆம் ஆசிரிய நெறிகளில் முழுமையாக நின்றவர் உச்சம் கண்டவர்துரோணர் .ஆனால் இளமையிலே அக்னிவேசர் குருகுலத்திலே அவர் அகத்தில் இருந்தது ஆசை.சாதாரணமனிதர்களிடத்தில் இல்லாத ஆசை  ‘வெண்முரசு – நூல் ஒன்று – ‘முதற்கனல் – 43 -  துரோணர் வில்லைஎடுத்து நிறுத்தி நாணை இழுத்தபோது அவரது பின்பக்கம் சுனை அதிரத்தொடங்கியது.  வில் தாழ்த்தி அவர்திரும்பி சுனையைப்பார்த்தார்பெருமூச்சுடன் அக்னிவேசரைப் பார்த்தார். “புரிகிறதல்லவா?” என்றார் அவர்துரோணர் தலைகுனிந்தார்.  “துரோணாவித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள்வேறெதுவும்கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.” துரோணர் வணங்கினார். “நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே.அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!” என்றார் துரோணரின் குரு அக்னிவேசர்.
ஆனால் அந்த எதிரியை வெல்ல துரோணரால் முடியவில்லை என்பதுவுமே ஊழ்வினை தான் .அந்தஆசைகளால் துரத்தப்பட்டவர் கடேசியாக  குருஷேத்திர யுத்தகளத்தில் அன்பு /முதன்மை சிஷ்யன்அர்ஜுனனுக்கு எதிராக வில்லேந்தும் கணம் வரை அவரை இழுத்து சென்றது .ஒரு ஆசிரியரின்  உயர்வு /மதிப்பு அல்லது வீழ்ச்சி /வீழ்வு என்பதனை அவரை பற்றிய சித்திரம் எப்படி அவரின்  மாணாக்கர்களிடம்எவ்வகையில் அமைகின்றது என்பதை பொறுத்தது தான் . ஒரு ஆசிரியர் தனது குடும்பத்தினரிடம் - மனைவி,மகன் மகள் ஆகியோரிடம் தனது முரண்செயல்களால் இழக்கும் நன்மதிப்பை விட ,தனது மாணாக்கர்களிடம்தான் அதிகமாக இழக்கிறார் .ஏனென்றால் மாணவனுக்கு ஆசிரியரே கண்கண்ட தெய்வம்(குருகுல முறையில்மண்ணில் வாழும் தெய்வம்.AN IDEAL TEACHER IS A ROLL MODEL FOR STUDENTS.தனது செயல்களில்/கற்றறிந்தவித்தைகளில்  ஆசிரியரை பிரதிபலிப்பவன் நன்மாணாக்கன் .துரோணரின் நன்மாணாக்கன் அர்ஜுனன் .நூல்எட்டு – காண்டீபம் –34  அர்ஜுனன் “நீ என்ன கண்டாய்?” என்றான். “நீர்பிளந்து எழுந்து உன்னைக் கவ்வ வந்தபெருமுதலையை முதலில் நீ காணவில்லைஅந்த ஒரு கணத்தில் நீ உடல் கிழிபட்டு குருதி வழிய அதற்குஉணவாவதை நான் கண்டுவிட்டேன்நல்லவேளை மறுகணம் நீ திரும்பி அதன் இரு கைகளையும் பற்றிக்கொண்டாய்சித்தத்திற்கு அப்பால் உன் தசைகளில் உள்ளது போர்ப்பயிற்சிஅஞ்சி அதன் நீண்ட வாயை நீபற்றியிருந்தால் கைகளால் உன்னை கிழித்து எறிந்திருக்கும் என்றது வர்ணபக்ஷன்(சிறிய மண்நிறக் குருவி) .“இப்போது வென்றது நானல்லஎனக்கு போர்க்கலை பயிற்றுவித்த ஆசிரியர்அவர் பெயர் துரோணர்கற்றுமறக்காத கலை வெறும் ஆணவம் மட்டுமேமுற்றிலும் பயனற்றது என்று அவர் சொல்வதுண்டு என்றான்அர்ஜுனன்.
அத்தகைய அர்ஜுனனுக்காக முதலில் துரோணர் இழைத்த பிழை ஹிரண்யதனுஸின் மைந்தன்ஏகலைவனிடத்தில் கட்டை விரலை தானமாக கேட்டது .பின்பு  குருகுல மைந்தர்கள் பாண்டவர்களும்,கவுரவர்களும் குருகுல கல்வியால் அடைந்த திறமைகளை ஹஸ்தினாபுரி நகர் மன்றத்தில்நிகழ்த்திக்காட்டிய போது,அர்ஜுனனுக்கு போட்டியாக இறங்கிய கர்ணனை இகழ்ந்து அவனை    அவமானப்படுத்தி போட்டியில் இருந்து வெளியேற்றியது .இவையாவையும் துரோணர் செய்ய காரணம்அவரது முதன்மை மாணவன் அர்ஜுனன் மீது கொண்ட அளவற்ற பற்றினால் தான் .ஆனால் குருதட்சணைஎன சொல்லி குருகுல இளவரசர்களை கொண்டு பாஞ்சால அரசன் துருபதனை யுத்ததில் தோற்கடித்து,தோற்ற துருபதனை  தேர்க்காலில் கட்டி இழுத்து வர அர்ஜுனனுக்கு ஆணையிட்டது துரோணர் இயற்றியபிழைகளின் உச்சம் .அது மட்டும் அல்ல பிள்ளைப்பாசத்தால்  அந்தண குல அசுவத்தாமனுக்காக உத்திரபாஞ்சாலத்தை வலுக்கட்டாயமாக துருபதனிடம் இருந்து பெற்றதுவும் மற்றுமொரு பிழை .அதன் மூலம்அர்ஜுனன் தனது குரு துரோணர் பற்றி கொண்டிருந்த நல்லதொரு பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தார் .ஆம்அர்ஜுனன் துரோணர் துருபதனுக்கு இழைத்த அவமானங்களை ஜீரணிக்க முடியாமல் தவித்தான்
வெண்முரசு .நூல் ஐந்து – பிரயாகை – 11“என்ன ஆயிற்று உனக்கு?” என்றான் பீமன். “ஒன்றுமில்லையேஎன்று சொல்லி பொருளில்லாமல் அர்ஜுனன் சிரித்தான். “நான் உன்னை எப்போதும்பார்த்துக்கொண்டிருப்பவன்உனது இந்த சஞ்சலம் தொடங்கியது நாம் துருபதனை வென்று திரும்பியபோதுஎன்றான் பீமன். “இல்லை என சொல்லப்போன அர்ஜுனனை இடைமறித்து “அது ஏன் என்றும் நானறிவேன்என்றான் பீமன். ”துரோணர் முன் துருபதனை கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான்நோக்கினேன்நீ துரோணர் கண்களையே நோக்கினாய்அவர் புன்னகை செய்ததை உன்னால்ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.”நிமிர்ந்து நோக்கி “ஆம் என்றான் அர்ஜுனன். “அந்த ஒரு கணத்தில்இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.ஆம் ஆசிரியரின் நெறிபிறழ்வை கண்டு வெதும்பியவன்அர்ஜுனன் .மேலும் அந்த அர்ஜுனனுக்கும் பிழை செய்தவர் துரோணர் .  அசுவத்தாமன் மீது கொண்டபிள்ளைப்பாசத்தால் அர்ஜுனனிடம் ஆணைகளை பிறப்பித்தவர் துரோணர் .‘வெண்முரசு – நூல் மூன்று – ‘வண்ணக்கடல் – 46 துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் “உன் குருவாக என்ஆணை இதுநீ என்றென்றும் இதற்குக் கட்டுப்பட்டவன் என்றார். “ஆணையிடுங்கள் குருநாதரே என்றான்அர்ஜுனன். “ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாதுஎக்காரணத்தாலும் என்றார் துரோணர்மறுகணமே “ஆணை என்றான் அர்ஜுனன்துரோணர் நடுங்கும் குரலில் “அவன் ஒருவேளை மானுடர்கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும் என்றார். “ஆம்அவ்வாறே என்றான்அர்ஜுனன்இத்தகைய நிகழ்வுகளால் சிறுமையுற்ற துரோணர் பதினாறாம் நாள் யுத்தத்தில் களம் கண்டார்என்பதே நாம் அறிவது .அதனையும் நிகழ்த்துவது இளைய யாதவர் கிருஷ்ணர் தான்.
நன்றி ஜெயமோகன் அவர்களே
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்