Thursday, January 24, 2019

ஒத்திசைவுகள்ஜெ வணக்கம்

இன்றைய அத்தியாயம் கார்கடல் -27, எனக்கு இணையும் புள்ளிகளாகவே தோன்றியது.

முதலாவது கத்ரு, தவ்வை, குந்தி, கருடன், நாகங்கள், கருடன் என்ற குவியமும் முரண்களும். பெருநாகம் கதவை திறக்க விடாமல் தடுக்கிறது. அதை மீறி கதவு திறந்த கர்ணன் முன் கத்ரு. வினதியை சதி செய்து பிடித்த கத்ரு. கர்ணனிடம் அர்ஜுனின் வாழ்வை சதி செய்து வரம் வாங்க கோரவிருக்கும் கத்ரு. ஆனால் அந்த கோரிக்கையை வைக்க தகுதியான வினதி. கத்ருவும், வினதியும் ஒன்றான குந்தி. குந்தி அல்லது அந்த பெருநாகம் எது உண்மையான வினதி? தேவர்களிடம் இருந்து அமுதை கொண்டு வர பணித்த வினதி. கருடனை வீரியமான செயலுக்கு ஊக்க படுத்திய வினதி. இங்கே தவ்வை வடிவில் தானே நஞ்சை கொண்டு வந்து கெஞ்சும் கத்ரு. அல்லது வீரியமான செயலை விட தனது வீரத்தையுமே தானமாக அளித்து பெரும் புகழை அடைய ஊக்கவிக்கும் வினதி. நாகங்களை அழிக்க வரம் கோருவது வினதியா? அல்லது அன்னை கோரிக்கைக்கு செவி சாய்க்க போகும் கர்ணன், பெரு நாகங்களால் காக்கபடும் கருடனா?

குந்தியின் முதல் மைந்தன், அன்னை அவனை ஏற்றிருந்தால் பாரததின் அரசன். துரோணரை அவனை ஏற்றிருந்தால், பரசுமாரை சென்று அடைந்திருக்க மாட்டான். அர்ஜுணனிடம் இருமுறை ஏற்கனவே தோற்றவன். துருபனை கவருவதற்காக துரோனர் நடத்திய படை எடுப்பிலும், விராடத்திலும். ஆனால் இன்று பெரு வீரானாக நின்றிருக்கிறான். ஆனால் பரசுராமரின் சாபத்தால் அந்த வீரத்தை உரிய தருணத்தில் இழக்க இருப்பவன். விதியின் முரண்களின் குழந்தை. குந்தி அவனிடம் கத்ருவாகவும், வினதியாகவும் வந்து நிற்பது அபாரம்.

இரண்டாவது கனவுகள். பிரயாகையில், பாண்டவர்கள், பாண்டு இறந்த பின் ஹஸ்தினபுரியை நோக்கி நடக்கிறார்கள். அவர்கள் நடப்பதை ஒரு யானை மரங்கள் ஊடாக நின்று பாரத்துக் கொண்டிருக்கிறது. துரியோதனன் துயிலில் கனவு காண்கிறான். அவன் கானும் காட்சியும் அது தான். அந்த யானை துரியோதனன். கனவு அன்ற அருவம், பரு பொளாக இன்னொரு கதாபாத்திரத்தின் வாழ்வில் தொடர்புரவது வியக்கதக்க புனைவு உத்தி. குந்தியும், கர்ணனும் இவ்வாறு பிணைந்து இருந்தது கனவுகளின் ஊடாக பிணைந்து இருந்த்து சிறப்பாக இருந்தது.

மூன்றாவது, கர்ணனின் அந்த திகைப்பு.
//
“அத்துடன் நான் பீஷ்மரை அஞ்சிக்கொண்டிருந்தேன். அவர் உள்ளம் குருதித்தூய்மையில், குடிச்சிறப்பில் ஊன்றியது. அவர் ஒருபோதும் உன்னை ஏற்கமாட்டார் என அறிந்திருந்தேன்.”

கர்ணன் திகைப்புடன் விழிதூக்கி “அவரா?” என்றான்.
//

அத்தியாயம் - 17. படுகளத்தில் கரண்னிடம் பீஷ்மர் சொல்லுபவை.

//
நான் பிற எவரையும்விட உன்னிடத்திலேயே மிகுதியான உரிமை எடுத்துக்கொண்டேன். ஏனெனில் நீ மூத்தவன். பிற அனைவரையும்விட உயர்ந்தவன். உனக்கு உரிய அனைத்தையும் தெய்வங்கள் எங்கோ வகுத்திருக்கும் என்று எண்ணினேன்.” பின்னர் விழிகளை மூடி பெருமூச்செறிந்தார். அவர் முகத்தில் எழுந்தது துயரா அல்லது மானுட உணர்வல்லாத வேறேதுமா என்று துச்சாதனன் எண்ணினான்.

“நீ நானே” என்று பீஷ்மர் சொன்னார்
//

பீஷ்மர் சிறு வயதில் ஒரு பெரு விள்ளனைக் கண்டு கொண்டு அவனை யாருக்கும் தெரியாமல் பார்த்தும் கொஞ்சியும் செல்கிறார். அவருக்கு தெரிந்திருக்கலாம் அது குந்தியின் மைந்தன் என்று. ஆனால் குந்தியே வாய் திறக்காதலால், அவரால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் மறு பக்கம் குந்தியோ வாயை திறந்தால், பீஷ்மர் பாண்டவர்களை, உங்களது மூத்தவன் சூத்திரன்,  ஷத்திரிய குருதி தூய்மை இல்லாதவன் என்று விரட்டி விடுவார் என்று பயந்து விடுகிறார்.

ஆக பெரியவர் இருவர் பேசாமல் தயக்கம் காட்ட பேரரசனாக வேண்டியவன், வாழ்க்கை முழுதும் இழியும், பழியும் பெற்று வாழ்கிறான். இந்த கணத்தில் எழும் அவன் திகைப்பு ஒரு பெரும் திகைப்பு