Sunday, January 13, 2019

நாகமும் கனவும்




அன்புள்ள ஜெ

இரு கடிதங்களில் நாகர்களுக்கும் கர்ணனுக்கும் இருக்கும் கனவுகளைப்பற்றி வந்தது. அப்போது நான் வெண்முரசை மீண்டும் வாசித்தேன். நாகர்கள் எல்லாவற்றையும் கனவு வழியாகவே அறிகிறார்கள். அந்த இயல்புதான் கர்ணனிடமும் இருக்கிறது. ஏனென்றால் நாகர்கள் மண்ணுக்கு அடியில் வாழ்பவர்கள். மண்ணுக்கு அடியில் இருப்பது கனவு. பாம்புகளும் கனவுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. மொத்த நகரத்துக்கும் அடியில் அவர்களின் உலகம் இருக்கிறது என்று வெய்யோனில் வருகிறது. குருக்ஷேத்திரத்துக்கு அடியிலும் அவர்களின் உலகம் வருகிறது. அதாவது பிரக்ஞைக்கு அடியில்தான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாகர்களின் கதைகள் எல்லாமே கனவும் நனவும் கலந்துதான் வருகின்றன. கர்ணனின் நனவு பலவீனமாகவும் கனவு ஆழ்மாகவும் இருக்கிறது

மனோகர்