அன்புள்ள ஜெ
சில வரிகள்வெண்முரசிலிருந்து அன்றாடவாழ்க்கை நோக்கி கொண்டுவந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட வரி இது
முதியவர்கள் துயில்கையில் அவர்களின் உள்ளத்தில் திரண்டு எஞ்சியிருக்கும் மைய உணர்வே சிற்பநிலைப்பு கொண்டு வெளிப்படும். தனிமை, ஏக்கம், கைவிடப்பட்ட நிலை, பற்றற்று விடுபடும் விழைவு, விடுபட்டுவிட்ட நிறைவு என
நான் இதை வேறுமாதிரி யோசித்திருக்கிறேன். குழந்தைகள் தூங்கும்போது அழகாக இருக்கின்றன. அவற்றில் உயிர்த்துடிப்பு இருக்கிறது. முதிய்வர்கள் தூங்கும்போதுபார்த்தால் ஏற்கனவே செத்துவிட்டவர்கள்போலிருக்கிறார்கள்.
இது ஏன் என்பதைப்புரிந்துகொள்ள முடிகிறது. முதியவர்கள் அவர்களின் வாழ்க்கைவழியாக அடைந்த எல்லாவற்றையும் முகத்தில் வைத்திருக்கிறார்கள். நான் ஞானிகளான எவரையும் பார்த்ததில்லை. அவர்கள் துயில்கையில் வேறுமாதிரி இருப்பார்கள் என நினைக்கிறேன்
எஸ்.செந்தில்ராஜ்