Wednesday, January 16, 2019

துரோணர்



ஜெ

ஒரே அத்தியாயத்தில் துரோணரின் குணச்சித்திரம் முழுமையாகவே வெளிப்படுகிறது. இருநிலைதான் அவருடைய பிரச்சினை. அவர் மாபெரும் ஆசிரியர். ஆனால் வஞ்சங்களாலும் ஆசைகளாலும் அலைக்கழிக்கப்படுகிறார். அவர் அந்தணர் ஆனால் ஷத்ரியர். அவருக்கு எல்லாமே தெரியும். ஆனால் ஆணவம் மறைக்கிறது

போர்க்களத்தில் உருவான நெகிழ்வில் எல்லாவற்றையுமே சொல்கிறார். அழுகிறார். ஆனால் துரியோதனனும் சகுனியும் புகழ ஆரம்பித்ததுமே அவர் அப்படியே ஆணவம் கொண்டு நான் நான் என்று நிமிர ஆரம்பித்துவிடுகிறார். இரண்டு எல்லைகளிலும் மாறிமாறிச் செல்கிறார்

விசித்திரமான கதாபாத்திரம். ஆனால் மகாபாரதத்தின் கதாபாத்திரங்களை எல்லாம் நாம் எங்கோ பார்த்ததுபோலிருப்பதுதான் ஆச்சரியமானது

டி.ஜெயச்சந்திரன்