ஜெ
சஞ்சயனில் எழுந்து
ஏகாக்ஷர் சொல்கிறார். இந்தப்போரை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது என்று. சொல்லிச்சொல்லி
பெருகி பலதலைமுறைகளுக்குப்பின்னர்தான் இதன் முழுவடிவையும் சொல்லில்காட்டிவிடமுடியும்
என்று. அந்த கற்பனை ஆச்சரியமானது. இந்தியாவை உருவாக்கியதில் சூதர்கள் பாணர்களின் பங்களிப்பென்ன
என்று யோசித்தேன். அவர்கள்தான் இந்த நாட்டின் எல்லாவற்றையும் மொழியிலே ஆக்கி காலாகாலமாக
கையளித்து வந்திருக்கிறார்கள். நாம் அறிந்த நிலம் வாழ்க்கை எல்லாமே அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்
செந்தில்குமார்