ஜெ
வெண்முரசை ஒரு
ஒற்றைக்கதையாக ஆரம்பம் முதலே தொகுத்துக்கொண்டு வரும் பல விஷயங்களில் முக்கியமானது நாகங்கள்.
கதையே நாகயாகத்திலேதான் ஆரம்பம். முக்கியமான எல்லா திருப்பங்களிலும் நாகம் இருக்கிறது.
நாக உலகம் பலமுறை பலவகையிலே வந்திருக்கிறது. நாகங்களின் கதை வெய்யோனில் வருகிறது. நாகங்கள்தான்
இந்தப்போரை ஆழத்தில் இருந்துநடத்துகின்றன. வெளியே வேறுசக்திகள் போரிட்டுக்கொண்டிருக்கின்றன
என தோன்றுகிறது
சக்திவேல்