Friday, January 18, 2019

போர்



ஜெ

வெண்முகில்நகரத்தில் இந்த வரிகளை வாசித்து அடிக்கோடிட்டிருந்தேன். சமீபத்தில் மீண்டும் கண்ணுக்குப் பட்டது

போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள். அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். 

உண்மையில் இலங்கையின் நிலை இன்று இதுதான். மிகப்பெரிய அழிவுகளைப் பார்த்துவிட்டோம். மிக மோசமான இழப்புகள் அத்தனைபேருக்கும். உச்சநிலையில் இருந்தவர்கள் பெரும்பாலும் தப்பிவிட்டார்கள். கொஞ்சம் நிலைமை மீட்சி அடைந்ததும் மீண்டும் போரை உருவாக்கிய அதே கசப்புகள் கூச்சல்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. எங்கும் வெறிகொண்ட பேச்சுக்கள். துரோகிப்பட்டங்கள். இந்த மனநிலையால்தான் அழிந்தோம் என்று சொன்னால் எவராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை
சரித்திரம் தொடங்கிய காலம் முதலே இந்தமனநிலைதான் இருந்திருக்கும் என்று படுகிறது


கே