Saturday, January 12, 2019

நாகன்

அன்புள்ள ஜெ

நாக உலகத்தின் கதையிலிருக்கும் குழந்தைத்தனமான வியப்புதான் புரானங்களின் அசலான தன்மை. மணிகர்ணி ஒரு மலைத்தொடராக விழுந்து கிடக்கிறது [ ஏறத்தாழ இதேபோல ஒரு படிமம் பிரமிளின் தெற்குவாசல் என்ற கவிதையிலே வருகிறது. தமிழில் வேறு எவருக்கும் இந்தவகையான ஒரு புராணிகக் கற்பனை வருவதில்லை] மலைத்தொடர் வடிவமான அந்த மணிகர்ணியின் கனவு பூமியில் ஒரு பாம்பாக மாறி பிறந்தது முதலே கர்ணனைப் பின் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கர்ணனை பின் தொடரும் அந்த ராஜநாகமே அவனுடைய வில்லாக கையில் அமர்ந்திருக்கிறது என்பது ஒரு அபாரமான கற்பனை. இத்தனை பக்கங்கள் வழியாக அந்த யூனிட்டியை கொண்டுவந்துசேர்த்திருக்கிறீர்கள். எங்களூரில் சிலையில் கர்ணனின் கையில் நெளியும் பாம்பு இருக்கும். அந்தச்சிலைதான் ஞாபகத்துக்கு வந்தது

ஜெயசீலன்