Sunday, January 20, 2019

மொழி


அன்புள்ள ஜெ

மழைப்பாடலில் இந்த வரிகளை செய்யுளை மனப்பாடம் செய்வதுபோல வாசித்துக்கொண்டிருந்தேன்

அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்

இந்த அழகுதான் தமிழ் என்று பட்டது. திசையென்பது அவன் சடைமுடி. அது திசையே இல்லாமல் சுழல்வது. தாளம் அவன் கால்கள். அசைவு அவன் கைகள். அதிலுள்ள அபிநயத்தால் உலகம் உருவாகிறது. ஒளி அவன் கண்கள். இருள் அவன் நாகம். அவனுடைய ஆடலைப்பற்றிய அற்புதமான ஒரு கவித்துவ வர்ணனை

மழைப்பாடலை கடந்துபோகவே நாளாகுமென நினைக்கிறேன்


ராதா ஆறுமுகம்