ஜெ
கர்ணனுடன் பேசும்போதெல்லாம்
குந்தி இங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இந்தக்குடிலுக்கு
அடியில் எவர் இருக்கிறார்கள் என்று கேட்கிறாள். அங்கே இருப்பது அந்த நாகம். அந்த நாகம் வரும் பாதாளவழி திறந்திருக்கிறது.
நாகங்களை இந்த நாவல்முழுக்க நீங்கள் ஆழ்மனதில் வாழும் உணர்வுகள் என்றுதான் சித்தரித்திருக்கிறீர்கள்.
முதல்நாவலான முதற்கனலே அதைத்தான் சொல்கிறது. அப்படியென்றால் அங்கே இருப்பது கர்ணனின்
ஆழ்மனம்தான். அவள் அறியவே முடியாத ஒன்று. அவள் அவனை வென்று செல்கிறாள் என நினைக்கிராள்.
அது உண்மை அல்ல. அவனுடைய ஆழ்மனதை அவள் அறியவே இல்லை. அதை உணர்கிறாள். ஆனால் அவளுக்கு
அதற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. ஆகவே அவள் சோர்ந்துதான் திரும்பிச்செல்கிறாள்
சத்யமூர்த்தி