ஜெ
நாகர்களின் புற்றுலகம்,
அங்கெ இருந்து எழும் அன்னையர்கள். அவர்கள் சொல்லும் கதைகளில் நாகருலகம் வரும் விதம்
எல்லாமே மகத்தான கற்பனைகளாக உள்ளன. குறிப்பாக ஒரு நுட்பமான விஷயம். அதை கவனிக்காமல்
போய்விடக்கூடாது என்பதற்காக எழுதிக்கொண்டேன். பாதாளநாகங்கள் தெய்வ உருவங்கள். அவர்களின்
ஒரு மானுடவெளிப்பாடுதான் மானுடர்களாகிய நாகர்கள். அந்த நாகங்களின் கனவு அல்லது விழைவு
மண்ணில் இப்படி ஒரு வாழ்க்கையாக விரிகிறது. தட்சன் பாதாளப்பெருநாகம். மண்ணிலிருக்கும்
தட்சன் அந்த பெருநாக பிரஜாபதியின் ஒரு கனவின் துளி
உண்மையில் இங்கிருக்கும்
நாகர்களின் கனவுதான் பாதாள நாகம். ஆனால் அதை அவர்களின் கதையில் தலைகீழாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
அங்கிருக்கும் நாகங்களின் கனவு தாங்கள் என ஆக்குகிறார்கள். அற்புதமான ஒரு திருப்பம்
அது. மிகக்கவித்துவமானது. மனிதர்களின் கனவு அல்ல தேவர்கள், தேவர்களின் கனவுதான் மனிதர்கள்
என்பது மனதை கிளர்ச்சியடையச்செய்கிறது
மகாதேவன்