ஜெ
புத்தாண்டில் எனக்கு அனுப்பப் பட்ட ஒரு வாழ்த்தில் இந்த வரி இருந்தது
நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது. வெல்லா வீழா பெருவிளையாடல்- மழைப்பாடல்
அதிலிருந்தே நான் மழைப்பாடலை வாசிக்க ஆரம்பித்தேன். இதன் தத்துவத்தையோ உணர்ச்சிகளையோ என்னால் இன்னமும் முழுமையாக வாசிக்கமுடியவில்லை. ஆனால் மொழி என்னை கொண்டுசெல்கிறது. முன்பின்நிகழற்ற என்ற ஒற்றைச் சொல்லில் எவ்வளவு அர்த்தம் மடிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைச்சொல் இதுவரை தமிழில் எவராலும் கையாளப்படாதது. வரிக்கு வரி அப்படி புதிய சொல்லாட்சிகள் வந்தபடியே இருக்கின்றன. வெண்முரசு தமிழுக்கு அளிக்கும் கொடை என்பது இதுவே
ராதா ஆறுமுகம்