Saturday, October 25, 2014

பிரயாகை 2


நொடி நொடியாய் அடிக்கி கட்டப்பட்ட காலவாகனத்தில் மனிதன் ஏறமுடியும், காலவாகனமும் மனிதன்மீது ஏறமுடியும்.  வாகனத்தில் மனிதன் ஏறினால் சுகப்பயணம். வாகனம் மனிதன்மீது ஏறினால் சோகப்பயணம்.

தன் செயலை காலத்தில் ஏற்றம் மனிதன் காலவாகனத்தில் பயணிக்கின்றான். தன் செயல்மீது காலம் வந்து ஏறும்போது அந்த மனிதன் மீது காலவாகனம் பயணிக்கிறது. அது நொடியாகவும் இருக்கலாம், யுகமாகவும் இருக்கலாம்.

காலவாகனத்தில் ஏறியும், காலவாகனம் தன்மீது ஏறியும் பயணம் நடக்கும் இந்த வாழ்க்கை நாடகத்தில் உத்தானபாதன் செத்து பிறந்து செத்து பிறந்து பயணித்து செல்கின்றான் என்பதை சொல் சொல்லாய் அடுக்கி பாதை அழைக்கின்றீர்கள் திரு.ஜெ. உத்தானபாதன் உடம் பிம்பம் அழிந்து அகன் அகம்மட்டும் எதிர்வந்து அமர்ந்து உரையாடுகின்றது. 
//என் மகன்என் சிறுவடிவம்ஆனால் நான் அவன் ஆன்மாவில் காறிஉமிழ்ந்தேன்.
இது இறப்பின் கணம்அதன்பின் மானுடர் மறுபிறப்பு கொள்கிறார்கள்.அதுவரை இருந்த அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்கிறார்கள்எரிந்துஅழிகிறார்கள்அல்லது உருகி மறுவார்ப்படைந்து விடுகிறார்கள்//

சுவாமி விவேகானந்தர் “ஒவ்வொரு மனிதனும் தனது அகத்தோடுதான் அதிகமாக போராடுகின்றான்” என்கிறார். தன்னை வெல்வதுதான் வீரம் என்றும் நித்தம் சொல்கின்றோம். உத்தானபாதன் தன்னை வீரன் என்று நிறுவ முயற்சி செய்கின்றான். அவன் ஒவ்வொரு கணத்தையும் தனது அகத்தோடு போராட வைக்கிறான். அவனுக்கு ஒவ்வொரு கணமும் வெகுதொலைவுக்கொண்டது. ஒருவருடம் முழுவதும் ஒன்றுமே செய்யாதவனுக்கு ஒரு வருடம் என்பது ஒரு பூஜியம் மட்டும். ஒலிம்பிக்கில் 100மீட்டரில் ஓடுபவனுக்கு ஒவ்வொரு மணித்துளியும் எத்தனை கனமும், தூரமும் நிறைந்தது? உத்தானபாதன் பெரும் போராட்டவீரன் தன்னை வெல்லத்தான் அந்தபோராட்டத்தில் குதிக்கிறான். அவன் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கின்றான். அவன்மீது காலவாகனம் ஏறி ஏறி சென்றுக்கொண்டு இருக்கிறது.

தோல்வி என்பது மரணம், மரணம் என்று தெரிந்து போருக்கு போகும் மனிதன் மரணத்திற்காக பயப்படுவதைவிட தோல்விக்காத்தான் பயப்படுகின்றான். தோல்வியில் சிறயது பெரியது என்று வேறுபாடு இல்லை. தோல்வியை கண்டு அஞ்சும் மனிதன் மனிதனை கண்டு அஞ்சுகின்றான். மனித குலம் முழுவதும் வேறுபட்டு துன்பப்பட்டு போலி இன்பத்தில் சுகம்காண்பது தோல்வியில் இருந்து விடுபடத்தான்.உத்தானபாதன் மதுகுடிக்கும் காட்சியே சாட்சி. 
மனைவியை அஞ்சும் கணவன், மகனை அஞ்சும் தந்தை, சீடனை அஞ்சும் ஆசிரியன், நண்பனை அஞ்சும் நண்பன் அனைவருக்கும் பின்னால் இருப்பது தோல்வி. தோல்வியை தாங்கிக்கொண்டு வாழ்வதுகூட தோல்வியின் தடத்தை அழிக்கத்தான். தந்தை தோற்றப்பின்பு மகன் ஒன்பது ஆண்டுகழித்து போர் நடத்தி செனறு வென்றவன் நாட்டை தீயிட்டு எரித்து, வெட்டி சாய்த்து இரத்தத்தில் குளித்து ஜெயஸ்தம்பம் வைப்பது வெற்றியா? இல்லை தோல்வியின் தடத்தை அழிப்பது. தோல்வி ஒரு மரணம் மட்டும், தோல்வின் தடம் முன்னால் நின்றுகொண்டே இருக்கும் மரணம். உத்தானபாதன் துருவனை தல்லியது, மகனை அல்ல அந்த தோல்வியின் இயலாமையின் தடத்தை. ஒரு கணம் நேரம் அகம் ஆடும் ஆட்டத்தை எழுத்தில் திரு.ஜெ எத்தனை உயரமான கோபுரமாக எழுப்பிக்காட்டுகின்றீர்கள். அற்புதம்.
//ஏனென்றால் அவனுடைய சொந்த ஆற்றலின்மைக்கும் அவன் தன்னுள்எப்போதும் உணரும் தன்னிழிவுக்கும் கண்முன் நின்றிருக்கும் சான்றுஅச்சிறுவன்அந்தச் சிறு உடல் அவன் முன்னால் நீட்டப்பட்ட சிறியசுட்டுவிரல்அவனைப்பற்றிய ஒரு இழிவாசகம் பொறிக்கப்பட்ட ஓலை.அவன் சென்றபின் அவனைப்பற்றி பூமியில் எஞ்சியிருக்கும் கீழ்நினைவு.உண்மையில் அந்தச் சான்றை முற்றாக மண்ணிலிருந்து அழிக்கவே அவன்அகம் எழுகிறதுஅது தன் குருதி என்பதனால் அதை தவிர்த்துச்செல்கிறது//

தோல்வி அடைந்து, மரணம் அடையமுடியாமல், தோல்வியன் அடையாளத்தையும் பெற்று உள்ள ஒருவன் அஞ்சுவது ஏளனத்தை, அந்த ஏளனத்தை காட்டாத எவரும் அவனுக்கு தெய்வம்போல்தான். துருபதன் தன்மீது ஏளனத்தைக்காட்டமாட்டான் என்று எண்ணுவது எத்தனை பெரிய வாழ்வியல் முரண். கடைசிவரை பரத்தையர்வீட்டிலேயே நடைப்பழகி இருந்துவிட்டு இரண்டு காலும் விழுந்துபின்பு கட்டிய மனைவியின் மடியில் வந்துவிழும் கணவன் எந்த நம்பிக்கையில் வருகின்றான், உயிர்மீது உள்ள ஆசையாளா? வாழ்க்கை மீது உள்ள நம்பிக்கையாளா? இனி ஏளனம் இல்லாமல் அந்த மடியில் மட்டுமே இருக்கமுடியும் என்ற நம்பிக்கையில். சுநீதியைக்கொண்டே துருபதனை எடைப்போடும் உத்தானபாதன் ஏளனமழைக்கு அஞ்சும் உப்பு.  ஏளனமழை இல்லாத இடம்தேடி அவன் தன்னை வைத்துக்கொள்வது ஒட்டு மொத்த மானிடவடிவத்தின் பிம்பம்.
//“வேண்டாம்நான் ஓய்வெடுக்கிறேன்” என்றான் உத்தானபாதன்.தலைவணங்கி அவன் சென்றதுமே நான் அஞ்சுகிறேனாஎன் மைந்தனையாஎன்ற எண்ணம் எழுந்ததுமறுகணம் ஒருபோதும் அவனைஅஞ்சவேண்டியதில்லை என்று எண்ணிக்கொண்டான்துருவனைப்போன்றமைந்தன் எந்நிலையிலும் தந்தையை அவமதிக்கத் துணியமாட்டான்.தந்தை வருந்தும் ஒன்றைச்செய்ய நினைத்தாலும் அவனால் முடியாது.ஏனென்றால் அவன் சுநீதியின் மைந்தன்எழுந்து “வரச்சொல்” என்றுசொல்லிவிட்டு தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான்//

வானை தந்தை என்றும், பூமியை தாய் என்றும் சொல்வோம், வானுக்கு இல்லாத சிறப்பு பூமிக்கு உண்டு. மலையும் பள்ளமும் பூமியில் உண்டு, கோயிலும், கல்லறையும் பூமியல் உண்டு, மலர்சோலையும், சிறைச்சாலையும் பூமியல் உண்டு, மண்ணை வெட்டி வைத்து மண்ணை பிரிப்பது மண்ணில் மட்டும்தான். நீருக்கு மண்ணும், மண்ணுக்கு நீரும் கரையாக இருப்பது பூமியல்தான். இந்த மண்ணில் பிறக்கும் மனிதன் மண்ணை வெல்கிறான், மண் மனிதனை வெல்கிறது. ஆணின் வயிறுபோல் பெண்ணின் வயிறு ஒரு உருப்பல்ல, பெண்ணின் வயிறு மண்போல வெல்ல சொல்கிறது. வென்றும் விடுகின்றது. பெண்ணின் வயிறு உருப்பல்ல என்பதை சுட்டும் ஜெவின் வரிகள் ஒவ்வொரு வயிற்றிலும் கத்திபோல் ஆழஇறங்கி திருகி இழுக்கப்படுகின்றது.
 //“அரசரின் மடியில் அமர விரும்புகிறாயா? அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும்?” என்றாள்.//

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். காடு என்ற சொல்லுக்கு மரங்கள் அடர்ந்த இடத்தையும் சொல்லலாம். மனிதன் கண்மூடியபின்பு பிழிப்பின்று தூங்கும் இடத்தையும் சொல்லலாம். இந்த பழமொழிச்சுட்டுவது. சாது மிரண்டால் மிருகமாகிவிடுவான் அல்லது கொன்று குவிப்பான் என்பது பொருள். துருபன் என்னும் சாது மிரண்டுவிட்டது. அது தன்னை தின்றுவிட்டது அதனால் அதற்கு மண்போதவில்லை, மண்ணேபோதாதபோது காடு எப்படி பத்தும். காடு என்பது மண்ணில் ஒரு சிறுபகுதிதானே.

துருபதன் அன்னை தந்தை இருவரையும் தாண்டிப்போகும் காட்சியில் வானை மண்ணைத்தாண்டிப்போகும் காட்சியை எழுத்தில் கொடுவந்து நிறுத்துகின்றீர்கள் ஜெ.
//ஒரு விழியசைவால்கூட விடைபெறாமல் திரும்பி நடந்துசென்றான்.
அவன் பின்னால் ஓடவேண்டும் என்று பதைத்த கால்களுடன் அசையாதநெஞ்சுடன் உத்தானபாதன் அங்கேயே நின்றான்பின்னர் உரத்தகுரலில்துருவாமைந்தா” என்று கூவியபடி இடைநாழிக்குப் பாய்ந்தான்//

//உத்தமரேஎளியவளாகிய எனது மைந்தனுக்கு உங்கள் வாழ்த்துக்களைஅளியுங்கள்” என்று கூவி மண்ணில் முழந்தாளிட்டு அவன் கால்களைத்தொட்டாள்.
துருவன் புன்னகையுடன் திரும்பி உத்தமன் தலையைத் தொட்டு “நலம்பெறுக!” என்று வாழ்த்தினான்சுருசியின் தலையைத் தொட்டுநிறைவடைக” என்று வாழ்த்திவிட்டு நடந்து சென்றான்//

அதிர அதிர அடிபடும் முரசுதான் பேரதிர்வையும்,பேரொலியையும் எழுப்புகின்றது. துருபதன் வாழ்க்கை கதையும் அதைத்தான் சொல்கிறது. வெண்முரசும் அப்படித்தான் அகக்கோலால் அடிப்பட்டு அகமதிரவைத்து அறத்தை ஒலித்துக்கொண்டு செல்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.