Sunday, October 19, 2014

வண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்வண்ணக்கடல்-17

இயற்கை எல்லாவற்றையும் தனக்குத்தானே சமன்செய்து கொள்ளும்படி வைத்து உள்ளது.

சூடு குளிர்ச்சியால், எலும்புகள் தசையால், பருப்பு ஓட்டால், பாதம் தலையால், படுத்திருக்கும் கல்மேல் நிமிர்ந்து நிற்கும்கல் சிவலிங்கம் ஆவதுபோல்.ஒரு மனிதனையே பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் வைத்திருப்பதுகூட இந்த சமன்செய்யும் விளையாடல்தான்போலும்.

துரியோதனன் தனது வலமும் இடமும் சமமான நிலையில் சிகண்டியின் நிலையை நினைக்காமல் இருக்க முடியவில்லை.ஒரு விதத்தில் துரியோதனன்கூட சிகண்டிதான்.சிகண்டினி அன்று ஆணாக மாறும்போது அடைந்த அதே மன ஆழுத்தத்தை இன்று துரியோதனனும் முழு ஆணாக ஆகும்போது ஏற்படுத்துகின்றான்.

சிகண்டி பெண்ணாக இருந்து ஆணானவன்.துரியோதனன் ஆணாக இருந்து ஆணாகமட்டும் ஆனவன்.

இயற்கையோடு விளையாடும் மனிதன் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் அதற்கான கூலியை இயற்கைக்கு கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது பலியிடப்படுவதற்காகவே சுதந்திரமாக வளர்க்கப்டும் சாமிக்கடாப்போல என்னதான் கம்பீரமாக துள்ளல் நடை நடந்தாலும் ஒரு நாள் தலைவெட்டப்படும் என்ற ஒரு சுமையை நமது அகத்தில் எழுப்பிவிட்டே செல்கிறார்கள் இவர்கள்.

அவர்களுக்குள் இருக்கும் அந்த கருணை என்னும் தாய்மையை அவர்கள் இழுக்கும் தருணத்தில் அவர்கள் நூல் அறுந்த பட்டமாகி விடுகின்றார்களோ?காலமெல்லாம் குரோதம் என்னும் காற்றில் அலைகழிக்கப்பட்டு ஏதோ ஒரு மின் கம்பத்தில் சிக்கி தலைகீழா தொங்கும் அந்த நாளை விதியா தருகின்றது?

காவியத்தின் எதிரணித்தலைவன் கொடுத்து வைத்தவன் அவனை ஆசிரியர்கள் தெய்த்தின் பீடத்தில் வைப்பது இல்லை ஆனால் தெய்வங்களுக்கும் கிடைக்காத ஒரு பீடத்தில் வைக்கிறார்கள். துரியோதன்கூட அப்படி ஒரு பீடத்தை நோக்கி போகின்றான் நாளுக்கு நாள்.


வண்ணக்கடல்-18

அறம் எது என்று சொல்ல வந்த தெய்வப்புலவன் வள்ளவர் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்ற நான்கு படிகளுக்கு அப்பால் இருக்கும் பெரும்பீடம் என்கின்றார் ஆனால் அந்த பீடத்தை இந்த படிகளில் கால்வைக்காமல் ஏறவேண்டும் என்றும் அடுக்கி உள்ளார்.

அவாவையும் வெகுளியையும் பக்கத்தில் அடுக்கி அதிலிருந்து இதுவும், இதுவில் இருந்து அதுவும் என்றதுதான் பிரிக்கமுடியாத உண்மை.


துரியோதனன் மீது துச்சாதனன் கொண்ட அவாவே அவனை கொலைகாரன் ஆக்கும் அளவுக்கு பீமன்மீது சினத்தை வளர்த்துக்கொள்கிறது.


வெகுளி என்ற சொல்லுக்கு சினம் என்றும் கபடமில்லாமை
என்றும் பொருள் பூத்து நிற்கும் தமிழ் அன்னையை இப்போது வணங்குகின்றேன்.
கபடமில்லாமையே பீமனை அவாவில் தள்ளி அவனை நஞ்சு உண்ண வைக்கிறது.இனி அவன் பிழைத்து வந்தால் அவனின் வெகுளித்தனம் அவனிடம் இருக்குமா?வெகுளி இழந்து வெகுளியாகி நிற்பான் இனி.அவனின் வெகுளி இனி அவனுக்கு உரிய அவாவாகிவிடும்.


பாசம்தான் எத்தனை கொடுமையானது.ஒருவனின் பாசம் நஞ்சு வைக்கிறது.ஒருவனின் பாசம் நஞ்சு உண்கின்றது.


ஆட்டி வைத்தால் யார் ஒருவன் ஆடாதாரோ கண்ணா!
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரோ கண்ணா!


பெரு உடல்கொண்ட ஒருவனை அழிக்க உடலாகி நிற்கும் சகோதர உறவுகள் வெற்றிப்பெறும் நிலையில்.பீமன் பாண்டுவின் குறல்கேட்பதும் அவனை அவர்தொடர்கிறார் என்பதும் எத்தனை நெஞ்சம் நெகிழவைக்கும் உண்மை.பருஉடல்கள் அழிந்தும் சூட்சும உடலோடு மண்ணில் உயிர்கள் நடமாடும் உண்மை.தவழும் பிள்ளையை விண்ணகம் சென்றும் தந்தையர் உள்ளம் கீழிறக்க மறுக்கிறது.

மந்தா!எங்கிருக்கிறாய்?’ 

அவருக்குஎப்படித்தெரியும்எனபீமன்வியந்துகொண்டான்.நாட்கணக்கில்அவன்காடுகளில்இருந்திருக்கிறான்.அப்போதெல்லாம்இத்தனைஅச்சத்துடன்பாண்டுஅவனைத்தேடியதில்லை.அவருக்குத்தெரிந்திருக்கிறது.அவர்அத்தனைநுட்பமாகஅவனைத்தொடர்ந்துவந்துகொண்டிருக்கிறார்.

உறவுகள் உடலால் பிணைக்கப்பட வில்லை, மனத்தால் பிணைக்கப்பட்டு உள்ளது என்பதை அழகாக காட்டும் ஆசிரியர் திரு.ஜெவின் சொற்கள் ஒளிவீசுகின்றன.வண்ணக்கடல்-21


செடி முளைத்து தளிரோடு பூத்துக்காய்த்து கனிந்து நிற்கையில் அறிய முடியவில்லை அதற்குள் இருப்பது அமுதமா?விடமா?என்று.ஆனால் அமுதமும் விடமும் விதைகளின் வழியாக வழி வழியாய் கடத்தப்படுகின்றது.
கருணைக்குளிரும் குரோதநெருப்பும்   வழிவழியாக மனிதனுக்குள் நிறைந்து நிற்கின்றது மனிதனை விதைகளாக்கி.தனக்குள் இருப்பதையே தனது சக்தியாகக்கொண்டு குழந்தையும் வளர்கிறது.


ஏதோ ஒரு சூழலில் தந்தை இதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கையில் அதை உதறி மேலே வரும்போது அவனின் வடிவமாக தனது மகன் ஆகிநிற்பதைக்கண்டு திகைக்கிறான்.
கடமையை செய், பலனை எதிர்ப்பார்க்கதேஎன்னும் கீழைமொழி.பலனின் மூலமே நாம் என்ன செய்திருக்கின்றோம் என்று நமக்கு காட்டுகின்றது.அன்றுதான் செய்த செயல் சரியா தவறா என்று கூண்டில் நிறுத்துகின்றது.சரி என்றால் கூண்டே சிறகாகி விண்ணகம் அழைத்து செல்கிறது.தவறென்றால் கூண்டே கயிறாகி தூக்கில் தொங்கவிட்டு கொல்லாமல் துடிக்க வைக்கின்றது.


அன்பு அறிவு கருணையை அகம் கொண்டு சந்ததிக்கு  கடத்துபவன் தனது தளைகள் அவிழ்வதை அறிகிறான், அவன் சந்ததி மூலம் மண்ணில் மானிடம் மகத்துவம்பெறுகின்றது..  கோபம், பாவம் கொண்டு சந்ததிக்கு கடத்துபவன் தனது தளைகள் சுருக்குகள் ஆகி துடிக்கவைப்பதை அறிகிறான்.
தனக்கா மட்டும் இல்லை தனது சந்ததிக்காகவும் மனிதன் சிக்கலான தருணத்திலும் நல்லதையே நாடும் இடத்தில் பெரும் சக்தியால் படைக்கப்பட்டு உள்ளான்.
இறைவன் அணைப்பது மட்டுமில்லை, அடிப்பதுகூட அவன் உயிர்கள்மீது கொண்ட கருணைதான்போலும்.


பிருகுகுலமும், ஹேகயகுலமும் தன் குலம் வாழவேண்டும் என்ற சுயநலத்தில்தான் தன்குலம் அழிவுக்கும் காரணாமாகி நிற்கின்றது.எங்கோ ஒரு துளிபோல் விழும் சுயநல விடம்தான் எப்படி பெரும் நெருப்பாகி குலக்காட்டையே அழித்துவிடுகின்றது.
மைந்தனின்அன்னைஅவனைஅள்ளிஎடுத்துதன்குடிலுக்குக்கொண்டுசெல்லும்போதுகுழந்தைதன்வலக்கையைவிரித்தது.அவள்அம்மலரைஅக்கையில்வைத்ததும்அதுபொசுங்கிஎரியத்தொடங்குவதுகண்டுதிகைத்தெழுந்தாள்.


அந்த தாயின் இடத்தில் நின்று நானும் திகைக்கின்றேன்.இங்கு ஒரு குழந்தை ஒரு விதையாகி நிற்பதை நினைத்து நினைத்து.


பரசுராமனும், ஊருவனும் ஒரே புள்ளியில் முளைத்து இரண்டு முகம் கொண்ட ஒரே தலையோடு நிற்பதுபோல் இருக்கிறது.