வண்ணக்கடல்-9
செயல்வடிவம் பெறாத எந்த ஞானமும் மண்ணில் தழைத்து நிற்க முடியாது என்பதற்கு சாட்சியாக உள்ளது சதுக்கப்பூதத்திற்கான அன்னப்படையல்.
வேதத்தின் பெரும் ஞானத்தை சடங்கு சம்பிராதாயம் வழியாக வாழ்வின் செயலோடு பிணைத்து வாழ்க்கைமுறையாக்கிய நம் முன்னோர்களால் கட்டப்பட்டு உள்ளது பாரதத்தாயின் மாண்பு.
சதுக்கப்பூதத்திற்கு அன்னப்படையல் நடக்கும் காட்சி ஒரு மூடநம்பிக்கையின் எளியவழிபாடுபோல் பொருள் அற்றதாக வெளித்தெரிந்தாலும் அதற்குள் நிற்கும் பிராத்தனையின் உச்சம் எல்லாவழிகளின் மூலமாகவும் உண்மையை நோக்கி மட்டுமே பயணிக்கும் வாழ்க்கையை வாழ்ந்த நம் முன்னோர்களை வணங்க வைக்கின்றது. இந்த காட்சியின் வழியாக பாராததிருநாட்டின் பண்பாட்டு வேதநெறி செயல்வடிவம் பெற்று நிற்கும் காட்சி எழுகின்றது.
ஓம், அன்னமயமானவனே.முதல்பேரியற்கையின்மைந்தனே, நீவாழ்க! எங்களுக்குவாழ்வையும்வலிமையையும்கொண்டுவந்தாய்.எங்கள்அன்னத்துடன்அன்னமாகஇணைவாயாக. அன்னம்அன்னத்தைஅறியும்பேருவகையைஎங்களுக்குஅளிப்பாயாக. ஆம், அவ்வாறேஆகுக!’
மெய் வாய் கண் மூக்கு நாக்கு மனம் சித்தம் என்ற ஏழால் அறியும் பிரமத்தை உடலால் இருபெரும் ஆளுமையாக இருக்கும் துரியோதனனும், பீமனும் தங்கள் உடம்பின் மூலமே அதை அறிபவர்களாக இருப்பது அற்புதம்.
எது அருளப்பட்டு உள்ளதோ அதன் மூலமே முன்னேறும், அதையே ஏணியாகக்கொண்டு உயரும் முக்திக்கான வழியாகப் படைக்கப்படுவதே அந்த பாத்திரங்களின் குறிக்கோளைக்காட்டுகின்றது. .
பகை என்று எதுவும் இல்லை, ஒன்றை ஒன்று அறியும் இரண்டு ஏதோ ஒருகணத்தில் இணைந்தும் ஏதோ ஒருகணத்தில் பிரிந்தும் இருக்கும் நிலையில் உணரும் காட்சிப்பிழைதான் பகை என்று காட்டப்படும் காட்சி அழகு. அறிதலால் அறியப்படும் அறியாமை பகை.
”எத்தனைகொடும்பகைமைகொண்டிருந்தாலும்ஆணும்பெண்ணும்தழுவிகொள்ளலாகாது.உடல்பகைமையைமீறிகாமத்தைஅறியும்”
”ஒருபோதும்இணைவல்லமைகொண்டஎதிரிகள்உடல்தழுவிக்கொள்ளலாகாது.உடல்கள்தங்கள்தனியுலகில்ஒன்றையொன்றுஅறியும்”
உடம்பினைமுன்னம்இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளேஉறுபொருள்கண்டேன்
உடம்புளேஉத்தமன்கோயில்கொண்டான்என்று
உடம்பினையானிருந்தோம்புகின்றேனே. –என்ற திருமூலரின் திருமந்திரத்தை வாழ்வியல் மந்திரமாக்கிக்கொள்ளபோகும் பீமனும் துரியோதனனும் இத்தனை இருக்கத்தில் இருப்பதே அவர்கள் பிரிவதற்கான ஒரு காலத்தை அவர்களுக்கு உண்டாக்கப்போகின்றது.
உடம்பினுக்குள்ளேஉறுபொருள்கண்டேன்
உடம்புளேஉத்தமன்கோயில்கொண்டான்என்று
உடம்பினையானிருந்தோம்புகின்றேனே. –என்ற திருமூலரின் திருமந்திரத்தை வாழ்வியல் மந்திரமாக்கிக்கொள்ளபோகும் பீமனும் துரியோதனனும் இத்தனை இருக்கத்தில் இருப்பதே அவர்கள் பிரிவதற்கான ஒரு காலத்தை அவர்களுக்கு உண்டாக்கப்போகின்றது.
அவர்கள் இருவரும் தனிமையில் ஒருவர் உடல்பற்றி ஒருவர் புலனாய்வு செய்யப்போகின்றார்கள்.
கூடி இருக்கையில் கூடிகூடி வரும் பேதமையால் துன்பம் இல்லை அறிவதால் வரும் அறிவால் எழும் பேதமை விலகும் கணத்தில் ஆதி பிணைப்பு அனைத்தையும் அறுத்தெரியும் கொடும் வாள் ஒன்று மின்னல்போல் கைக்குகிடைத்துவிடும். இந்த பிணைப்பே அது பிரியபோகும் தருணத்திற்கு நம்மை சுண்டி இழுக்கிறது.
உடல் ஓம்பும் சகோதரர்கள் இருவர் தலையாக, ஞானம்தேடும் அன்னையும் மகனும் நெஞ்சாக, அன்னப்படையலும் பக்தரும் பாதமாக இந்த பகுதியே ஒரு மனித வடிவில் நிற்கின்றது.
மேலே இருக்கும் ஜீவன் ஒரு பெண்ணால் அதன் அருகில் வருகின்றது, அருகில் வந்த அது அதன் மடிக்கு வருகின்றது, மடிக்கு வந்த அது அவள் காலுக்கு வருகின்றது, காலுக்கு வந்த அது அவள் பாதத்தை சூடிக்கொள்கின்றது. அன்னையின் அலகிலா நடனமும், ஒரு ஜீவனின் ஓயாத பயணமும் எத்தனை எளிய வடிவில் இங்கு திரு.ஜெவால் காட்டப்படுகின்றது.
அன்னை அன்றி ஜீவனுக்கு கதியில்லை, அன்னை அன்றி அது அறியவேண்டியது ஒன்றும் இல்லை, அன்னை அன்றி ஒரு ஜீவன் மண்ணுக்கு வரமுடிவதில்லை, அன்னை இன்றி ஒரு ஜீவன் விண்ணேகவும் முடிவதில்லை, அன்னையை அறிந்த பின்பு அன்னையும் ஜீவனும் வேறு இல்லை. மண்ணக வாழ்க்கைக்கும் விண்ணகவாழ்க்கைக்கும் அன்னையையே ஆதாரமாக்கிய அன்னையாகிய அந்த ஆதி பரம்பொருள் வாழ்க.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ”உடபில் சிவனும். உள்ளத்தில் காளியும், நாவில் ஹரிநாமமும் இருக்கட்டும்” என்பார்கள்.வேறுபாடாக இருக்கும் ஒற்றுமைகள்.
அஸ்தினபுரி என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் சொல்லும் சொல் எல்லாம் பாரதத்தாய் அன்றி வேறில்லை. ”உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே”
வண்ணக்கடல்-16
வெண்முரசின் அழகே அதன் மையக்கருவாகிய மென்பாதங்கள் இரண்டும் வெளிப்படும் இடமும்.அந்தப் பாதங்கள் பின் அத்தியாயம் முழுவதும் காற்றில் அசைந்து நடனம் செய்யும் அழகோடு அற்புதமாக நடனமாலிகாவாக ஆகிவிடுகின்றது.
கண்ணப்பன் தனது கண்ணைக்கொடுத்து சிவனுக்கு கண்திறக்கவைத்த இடத்தில் காளமுகர்கள் தன்னைத்தானே பலியிடும் சிவலீலை காணும் ஒருகாட்சி. ஒரு பாதம்
தன்னிடம் இருந்த குழந்தமையை பலியிட்டு துரியோதனன் குரோதத்துடன் எழுந்து வரும் காட்சி.மறு பாதம்.
இந்த இரண்டு பாதங்களின் நடனத்தில் வண்ணக்கடல் அமுதம் கடையும் கடலென ஓசையிட்டுப் பொங்குகின்றது.
காமம் குரோதம் மோகம் எத்தனை அழகான எளிய விளக்கம்.எண்ணும்தோறும் எண்ணும்தோறும் கடலின் அலைபோல நகர்ந்து கொண்டே இருக்கிறது எண்ணம்.
“இளைஞரே, காமம்குரோதம்மோகம்என்னும்இம்மூன்றுஇருள்களில்காமம்இன்னொருஆன்மாவைச்சார்ந்தது.மோகமோபுறவுலகைச்சார்ந்தது.எதையும்சாராமல்தன்னுள்தானெனநிறைந்திருப்பதுகுரோதமேயாகும்.எனவேகுரோதத்தைஅறிபவன்சிவத்தைஅறிகிறான்.குரோதம்அனைத்தையும்அவியாக்கிஎரிந்தெழும்நெருப்பு.எரிதலின்பேரின்பம்அது.எரிதலின்உச்சம்அணைதலே.குரோதம்தன்னைத்தானழித்துக்கொள்கையிலேயேமுழுமைகொள்கிறது.”
சூலம் நாட்டி அதில் தானே விழுந்து இறந்துப்போகும் காளமுகர்களுக்கும், துரியோதனனுக்கும் என்ன ஒரு ஒற்றுமை.அதை அலகில விளையாட்டு உடையவர் விழிதிறந்துக் கண்டுக்கொண்டேதான் இருக்கிறார்.அப்பன், அம்மை, அனைத்து உறவும் ஆன அவன்தான் மகாக்குரோதமாகவும் ஆகி நிற்கின்றான்.
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானாய்
மன்னனாய் மன்னவர்க்கோர் அமுதமானாய்
மறை நான்குமானாய் ஆறங்கமானாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னினல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
திருச்சிற்றம்பலம்.
நன்றி