Friday, October 24, 2014

பிரயாகை கிட்டத்தட்ட யதார்த்தவாதம்




[மதுபானி துணிப்பின்னல் ஓவியம்]


அன்புள்ள ஜெமோ சார்

வெண்முரசு பிரயாகையை படித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசு இணையதளத்தில் வெளியாகும் கடிதங்கள் உடனுக்குடன் கீழே போய்விடுகின்றன. ஒருநாளிலேயே நிறைய கடிதங்கள். தேடிச்சென்று கீழே எடுத்து வாசிக்கவில்லை என்றால் காணாமல் போய்விடுகின்றன. கவனிக்கவும்

பிரயாகை தீவிரமாக ஆரம்பித்திருக்கிறது. நாவலின் அமைப்பை ஆரம்பத்திலேயே ஊகிக்க முடிகிறது. almost realism என்று ஒரு புது வார்த்தையைச் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டேன். கறாராக எழுதப்பட்டிருக்கிறது. வர்ணனைகள் இல்லை. ஆனால் வரும் வர்ணனைகள் வலுவாக உள்ளன. வர்ணனைகள் கூட முதற்கனல் போல காவியத்தன்மை இல்லாமல் நேரட்யாக உள்ளன- உதாரணம் சுட்டு விரலை இரும்புச்செருப்பால் மிதிப்பதுபோல என்ற வரி

முழுக்கமுழுக்க உளவியல் நுட்பங்கள் வழியாகவே கதை செல்கிறது. மனிதனுக்கு இருக்கும் நுட்பமான சஞ்சலம் என்பதே தீமை மேலே உள்ள கவற்ச்சிதான். அதை நீங்கள் முன்பு எழுதியிருக்கிறீர்கள் [நாலாண்டுக்காலம் குடித்து அலைந்த எனக்கு அது தெரியும்]

எது ஒன்றை  நாம் விலகி விடுகிறோமோ அது உடனே தெளிவாகிவிடுகிறது. பச்சைப்பாம்பு என்று சுருசியை கணவனாகிய உத்தானபாதன் உணரும் இடம் ஒரு classic moment

உளவியல்கதை திடீரென்று வானியல் வழியாக மானுட ஞானம் உருவான இடம்பற்றி சொல்லத் தொடங்கும்போதுதான் yes this is a classical text என்று சொல்லிக்கொண்டேன்.

சந்தானம்