Wednesday, October 22, 2014

வனமும் பூங்காவும்




அன்புள்ள ஜெமோ சார்,வணக்கம்.

அடர் வனம் போலிருந்த நீலத்ததை தாண்டி,பூங்காவெனும் பிரயாகைக்குள் புகுந்திருக்கிறேன்.
நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் ஒத்த நடை அற்புதம்.
கீழும்,மேலும் இல்லாத இடைபாய்ச்சல்.
சவலைப்பிள்ளையாக முதல் அத்தியாயத்தில் வந்த துருவன், ‘ககனவெளியின்’கொடையால்,
ஞானப்பேருருவாக நின்ற காட்சி,12 மணி நடு இரவில் என்னை சிலிர்க்கவைத்தது.
மேதையும் -அறிவிலியும்,வீரனும்-கோழையும்,செல்வனும்-வறியவனும்,ஆண்டியும்-அரசனும்
இயற்கை புகுந்தாட்டும் உள்ளீடற்ற உருவெளித்தோற்றங்கள் தானா?


           எம்.எஸ்.ராஜேந்திரன் - திருவண்ணாமலை.



அன்புள்ள ஜெமோ சார்,  இரண்டு நாள் முன்பு தான் வண்ணக்கடல் முடித்துவிட்டு , தீபாவளி அன்று  "நீலம்"  தொடங்க வேண்டும்  என்று, தீபாவளியை விட நீலத்தை தொடங்க ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறேன் , நீலம் பித்து பிடிக்கும் போது நிறைய எழுதுகிறேன், 


இப்போதைக்கு,  முதல் கனலில் விழுந்து ,மழை பாடலில்  நனைந்து, மனம் வண்ணக்கடலாய்  மாறியது பற்றி ஒரு சில வரிகள்,  வேசர தேசத்தில் மானசா தேவி ஆஸ்திகனை, மடியில் அமர்த்தி பிரபஞ்ச கதை சொல்ல ஆரம்பித்த, அந்த நொடியே நானும், மனதளவிலே, உங்கள் மடியில் அமர்ந்துவிட்டேன், அஜிதனுக்கும், சைதன்யாவிர்க்கும், எனக்கும் சேர்த்தே இந்த கதையை, ஒவ்வொரு நாளும், நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள், 

பள்ளி ஆசிரியரின் பணி, அந்த வகுப்பறையை, கலகப்பாக வைப்பதில் தான் சிறப்பு பெறுகிறது என்றாலும், மாணவர்களுடைய, மனம் விரிவடைய  வைப்பதிலும், முக்கிய பங்கு உண்டு,  உங்களுடைய பல வர்ணனைகள், சிறு சிறு, கதை நுணுக்கங்கள், இன்னும் பல, பல, நான் உங்களிடம் இருந்து காப்பி அடித்து, மாணவர்களுக்கு, சொல்லி இருக்கிறேன்,  

ஆனாலும், அதன் கிரெடிட், பெருமிதம்,  முழுவதும் உங்களுக்கு , அன்றைய வகுப்பின் முடிவில் சமர்ப்பித்து விடுவதும் உண்டு. 

ஒரு நாள் வகுப்பில், அம்பையின் கதை விஸ்தாரமாக உங்கள் பாணியில் சொல்லப்பட, மாகாபாரதத்தில், இத்தனை, உப கதைகள் இருக்குமா, என்று " வாய் பிளந்து கேட்டுகொண்டிருந்தது, இன்றைய FACE BOOK தலைமுறை, 
நிறைய  எழுத வேண்டும் என்று ஆசை, என் வாழ் நாள் போதாது, 
இரண்டு கேள்விகள் மட்டும் , 
வண்ண கடலில், பாண்டவர்களும், கௌரவர்களும், இவ்வளவு, வளர்ந்து விட்டார்களே, கூடவே, பகையும், வளந்தே வருகிறதே, , ஒருவருடத்திலேயே, தேர் இவ்வளவு தூரம், வந்துவிட்டதே, மீதி  9 வருடம், எப்படி நகரும்,?
தங்களுடைய சென்னை வருகையை, தெரிவிக்கவும், நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன், 

எழுத ஆரம்பித்து வார்த்தைகள்  வராமல் தவிக்கிறேன், இளநாகன், போல் நானும், மஹுவா  வெண் முரசு எனும்),  குடித்து விட்டு கால் பரப்பி , கை குவித்து எங்கோ கிடக்கிறேன்,  
 


 அன்புடன், 
சௌந்தர் .G