வான்காவின்
இந்த ஓவியமும் (Stary night) , பால் வழிப் படமும் நினைவுக்கு வருவதைத்
தவிர்க்க முடியாது , பிரயாகை எழுத்தில் சாதித்ததை ஒரு கையளவு படத்தில்
இவைகள் சாதித்திருக்கின்றன.
|
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பிரயாகையின்
ஆரம்பமே ஆட்கொள்கிறது. இதில் துருவன், கங்கை கதைகள் புராணங்களாக மட்டும்
இல்லாமல் நம்முடைய Galaxy, Universe, Rain Water Circulation என்று பல
அறிவியல் விஷயங்களையும் தொட்டு தழுவி செல்கிறது.
அளவிலா
கோபமும் அடங்காத காமமும் ஒருங்கே கொண்டு திரௌபதி மண்ணில் ஜனிக்க போவதை ஒரு
சலன சித்திரமாக அல்லது காட்சிகளின் தொடர் படிம வழியாக நிகழ்த்தி
காட்டுகிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி.
அன்புடன்,
கணேஷ்
பஹ்ரைன்.