Tuesday, October 28, 2014

வண்ணக்கடல்-தானம்-ராமராஜன் மாணிக்கவேல்



தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது ஏன் என்று புரிகின்றது.
சுயநலத்தைத்தாண்டி நல்லக்காரியத்திற்காக ஒரு பைசா எடுப்பது என்றாலும் பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது.


ஜீவகாருண்யம்என்ற சொல் பீமன் போல் அதிபலம் நிறைந்தவனுக்கு எவ்வளவு எளிதில் புரிந்துவிடுகின்றது.“மனிதர்களைக்கொல்வதைப்போலஇழிசெயல்ஒன்றுமில்லை.இங்கேநின்றுஅன்னம்எழுவதைக்கண்டஒருவன்உடல்என்பதுஎத்தனைமகத்தானதுஎன்பதைஉணர்வான்.ஒருதலையைகதையால்உடைக்கசிலநொடிகள்போதும்.அந்தத்தலையைஅதன்தாய்பெற்றுஉணவூட்டிவளர்த்துஎடுக்கஎத்தனைநாட்களாகியிருக்கும்.எத்தனைஅடுமனையாளர்களின்உழைப்பால்அந்தஉடல்வளர்ந்துவந்திருக்கும்!”


நாளை விதி இவனை இவன் விரும்பாததை செய்யவைத்துவிடும் கொடுமையை என்ன சொல்ல?எல்லோருமே காலத்தின் கைப்பாவைதானா?
http://www.youtube.com/watch?v=FfGqjXfIYlQ


நன்றி
வண்ணக்கடல்-41


நல்ல சீடன் குருவிடமிருந்து அறியாதது எதுவுமில்லை, ஆனால் நல்ல சீடனிடன் குருவிடம் கேட்க கேள்விகள் அற்றபோவதும் இல்லை.
நல்லக்காதலன் பொய்சொல்வதில்லை ஆனால் அவன் உண்மையும் சொல்வதில்லை என்பதை நல்லக்காதலி அறிகிறாள்.


நல்ல சீடன் நல்லக்காதலன் அர்ஜுனன், அவனின் அக ஓவியம் எத்தனை அழகாக தீட்டப்பட்டு வண்ணம்செய்யப்படுகின்றது.  


முகக்கண், விரல்கண், அகக்கண் மூன்றாலும் பார்க்கக்கூடியவன் அர்ஜுனன் அவன் கண்களுக்கு திருதராஷ்டிரன் பிள்ளைகள் கண்ணில்லாதவர்களாக தெரிவது எத்தனைப்பொருத்தம், இந்த விதை விருட்சமாகி நாளை பாஞ்சாலிக்கண்ணிலும் தெரியவருவதுதான் எத்தனை கொடூரம். ஏதோ ஒரு நிலையில் தோன்றும் தீயநினைப்பு காரணக்காரியம் இல்லாமல் பெரிதாக இம்சிக்கின்றது.

கிருபி அஸ்வத்தாமனைப்பெற்று எடுக்கும் நாளில் அஸ்தினபுரியில் அஸ்வத்தாமன் என்ற யானைக்குட்டி பிறந்து உள்ளது.இந்த முடிச்சி அவிழும் நாளில் கதையில் போக்கே மாறிவிடும் அதுவரை அந்த முடிச்சி அப்படியே இருக்கட்டும்.ஆனால் அஸ்வத்தாமனின் அப்பா துரோணர் அஸ்தினபுரிவரும் நாளில் காலக்கீர்த்தி இறக்கக்கிடக்கும் காட்சி நெஞ்சை பிசைகிறது.


என்னத்தான் குருட்டுத்தனமும், முட்டாள்தனமும், பகை உணர்ச்சியும் இருந்தாலும் மனித உடல்கள் ஒன்றை ஒன்று தொடவும், ஸ்பரிசிக்கவும், தழுவமும் விரும்புகின்றன.பீமனின் தொடுதலுடன் விளையாட ஏங்கும் அந்த பிஞ்சுகளின் இதயம்தான் எல்லா மனிதரிடமும் இருக்கின்றது.மனிதனின் அகங்காரம் அந்த பாசத்தை மிதித்து தின்று வளர்ந்து மனிதனை மறைத்துவிடுகின்றது.  


கதை எழுதுவதற்கும், கதை செய்வதற்கும், கதையைப்பெற்று எடுப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.

கதையைப்பெற்று எடுக்கும்போது அதற்கு உடலும்.குருதியும், இதயமும், சுவாசமும் வந்துவிடுகின்றது.திரு.ஜெ கதையைப் பெற்று எடுக்கின்றார் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?ஆனால் நான் சொல்லவேன்.

நன்றி