Tuesday, October 28, 2014

யுதிஷ்டிரனும் பார்த்தனும்




தருமனும்,அர்ச்சுனனும் உரையாடிக்கொண்டு வந்ததை படித்தேன் (பிரயாகை - 6)
அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த களமும்,காலமும் அருமை.ஓடும் கடல் போன்ற கங்கையின் நீர் பரப்பு. அதிகாலை நேரம்.குறுக்கீடுகளுக்கு யாரும் இல்லாத தனிமை.
வெற்றுடலாக படுத்த அர்ச்சுனன் மீது சால்வையை தருமன் போர்த்தியிருப்பான் என்கிற நெகிழ்வோடு,தருமனை எதிர்கொள்ளும் அர்ச்சுனன்.....
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களில் அர்ச்சுனன் பாக்கியசாலி.
அறமே வடிவான தருமனின் நீதியுரைகள்,ஞானமே பேருரு கொண்டு வந்த கண்ணனின் கராரான உபதேசங்கள்....இதெல்லாம் கேட்கும் கொடுப்பினை அர்ச்சுனனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
உலகியல் வெற்றிகளும்,அதிகார நுகர்வும் ஏறக்குறைய அனைத்து பாத்திரங்களும் அடைந்திருக்கின்றன.ஆனால்,தத்துவ விவாதங்களையும்,ராஜநீதிகளையும்,ஆன்மீக கூறுபாடுகளையும் கேட்கவும் - அறியவுமான நற்பேறு அர்ச்சுனனுக்கு மட்டுமே வாய்த்திருப்பதில்,இயற்கை அவனை தன் செல்ல மகனாக வரித்திருக்கிறதோ
என எண்ணத்தோன்றுகிறது...

..
       - எம்.எஸ்.ராஜேந்திரன் - திருவண்ணாமலை.