ஒரு பெண்ணிடம் காமம் என்றால் அவள் அங்கம்போதும், ஒரு பெண்ணிடம் காதல் என்றால் அவளின் உடலும் உள்ளமும் போதும், ஒரு பெண்ணிடம் பக்தி என்றால் அவளின் ஒவ்வொரு அசைவும் பரவசம்தான்.
தருமனின் வாய் வார்த்தை மூலம் அறிய முடிகின்றது.அன்னையாக இருக்கும் குந்தியை தெய்மாக கொண்டுவிட்டான் அர்ஜுனன் அவன் அதை அறியவில்லை.சிவபெருமானை தோழன்போல் பணியாளன்போல் நினைக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் நிலை.அவரின் பக்திதான் அவரை அந்த நிலையில் தள்ளியது.
காதலியாகி அண்ணியாகி கைபெண்ணாகி நிற்கும் குந்தி இன்று விதுரன் மனதிலும் தெய்வத்தின் நிலைதான்.அதை விதுரன் உணர்ந்தே இருக்கின்றார்.அந்த தெய்வீக பரவசம் அவருக்குள்ளும் இருக்கிறது.
ஒரே அகல்தீபம்தான் இரு உள்ளத்தின் ஆடிகளில் பிரதிப்பளிக்கின்றது.அது கண்களின் வழியாக தெரிகின்றது.அர்ஜுனன் விதுரன் கண்களின் வழியாக விதுரன் அகத்தில் பார்க்கிறான்.விதுரன் அர்ஜுனன் விழிவழியாக அர்ஜுன் அகத்தில் பார்க்கிறார்.
வெளியில் இருக்கும் தீபத்தை தனக்குள்தான் இருப்பதாக நினைத்து இருவரும் தவிக்கிறார்கள்.மாயைதான் எத்தனை வடிவில் மகத்துவத்துடன் படர்கின்றது.
யானத்தில் உள்ள எண்ணையில் அல்லது சித்ராங்கதன் விழுந்த தடாகத்தில் இருவரும் குனிந்தார்கள் என்றால் அர்ஜுன் விதுரனைப்பார்ப்பான்.விதுரன் அர்ஜுனனைப்பார்ப்பார்.
மீண்டும் ஒரு ஆடிப்பிம்பமா?
குடித்துக்கொண்டு இருக்கும்பாலை தங்கை பூனைக்குட்டிக்கு ஊற்றும்போது ”நங்குன்னு” ஒரு கொட்டு வைப்பேன். அது அழுதுக்கொண்டே ஓடி அப்பா மடியில் குட்டிக்கங்கையை எழுந்தோட வைக்கும்.
”அவன் கிடக்கிறான் ஜீவகாருண்யம் இல்லாத பய, வருட்டும் அவன் தோல உறிச்சிவிடுறேன், அழக்கூடாது..அழக்கூடாது” என்ற அப்பா பாப்பாவின் கண்களை துடைத்துக்கொண்டு இருக்கும்போதே தோட்டத்து பக்கமாக நழுவி தெருபக்கம் சென்று விடுவேன்.
”ஜீவ காருண்யம்” என்றால் என்ன?நினைத்தது இல்லை.
“என்னடா கறித்திங்கிற, ஒரு எலும்பை கடிக்க பல்லுல தெம்பில்லை” என்று அப்பா எலும்பை கடித்து சுவைத்து முருங்கைக்காய் சக்கையா துப்பும்போது “இது எந்த வகை ஜீவகாருண்யம்” என்று கேட்க தோன்றியதும் இல்லை.
இந்த விடுமுறையில் இறைவன் கருணையால் வள்ளல் பெருமான் சிதம்பர ராமலிங்க சுவாமிகள் பிறந்த மருதூர் வழியா நண்பரின் வீட்டுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. பைக்கை கோயில் முன்பு நிறுத்திவிட்டு வள்ளலாரை வணங்கி விபூதி பூசிக்கொண்டு கருவரையை சுற்றி வராலாம் என்று அடியெடுத்து வைத்தபோது தீபாராதனைக்காட்டிய அடியவர் “எங்க வேலைப் பார்க்கின்றீர்கள்” என்று கேட்டார்.
சௌதியில் ஒரு பழக்கம் உண்டு “உங்க பெயர் என்ன?” என்று அழுத்தமாக்கேட்பது.அது நமது பெயரை தெரிந்துக்கொள்வதற்காக இல்லை.அந்த ஞாபம் வந்தது.
கண்களில் தொங்கிய ஆச்சர்யத்தோடே பதில் சொன்னேன் “சௌதியில் வேலைப்பார்க்கின்றேன்”.
“அப்ப மாமிசம் சாப்பிடுவிங்கல்ல?”
ஆடுன்னா தொடைக்கறி, கோழின்னா லெக்குபீஸ், இறால்ன்னா வறுவல், மீன்னா இந்தியாவில் விறால், சௌதியில் அமூர் என்று நாக்கிலேயே ஒரு பட்டியல் யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒட்டி வச்சிருக்கேனே. வாய் அடைத்துப்போனது.அடியவர் “ஜீவகாருண்யம் கடைபிடிப்பவர்கள் இதை சுத்திவரலாம், அதற்குமேல் உங்கள் விரும்பம்” அவர் மௌனமாக திரும்பிக்கொண்டார்.
அப்போது “பாடி ஸ்டாங்கு, பேஸ்மண்ட் வீக்குன்னு” வடிவேல் சொல்லும் காமெடி சிரிக்கவே முடியாத அளவுக்கு எனக்குள் சீரியசானதை உணர்ந்தேன்.தரை நழுவியது.
நான் வள்ளலார் பாதத்தில் அங்கேழே விழுந்து வணங்கிவிட்டு திரும்பி வந்துவந்தேன்.
அப்பாவின் நினைவு “ஜீவகாருண்யம்” என்ற சொல் மேலே மேலே எழுந்து வந்துக்கொண்டே இருந்தது.நமக்கும் ஜீவகாருண்யத்திற்கும் எவ்வளவு தூரம் என்று நினைத்துப்பார்த்தேன்.
நின்றும் நடந்தும் கிடந்தும் நினைத்துப்பார்த்தேன்.நாணயத்தின் தலை தனது வாலைப் பார்க்க நினைத்ததுபோல் முடியவே இல்லை.
இங்கு ஒரு பூனை மூன்றுக்குட்டிகள் போட்டு உள்ளது.இரண்டு நாய் குட்டிகள் உள்ளன.அவைகளைப்பார்க்கும்போது “என்னடா மனுஷன்” எல்லா வற்றிலும் நடிக்கிறான் என்று தெரிகிறது.அவைகளிடம் நிஜமான சீற்றம், சிஜமான அன்பு.அடிக்கிற வெயிலின் சூடுதாங்க முடியவில்லை, ஆறும் ஒரே பாத்ருமில் படுத்து ஒன்றின்மேல் ஒன்று தலைவைத்துகிடக்கிறது.
அப்பா நம்மை பாசத்தோடு திட்டுவது “உனக்கு கதலிபுத்திடா” என்று.
கதலி காய்ந்துவிட்டதோ என்னவோ மூனுநாளுக்கு முன்னாடி பத்திகிச்சி, கடைக்குபோய் கொஞ்சம் பால் வாங்கி வந்தேன்.அந்த தாய்பூனைக்கு கொஞ்சம் ஊற்றினேன்.இரண்டு நாய்குட்டியும் இதைப்பார்த்துக்கொண்டே சற்று தூரத்தில் படுத்திருந்தது. மீந்தப்பாலை அந்த பூனைக்கு நாளைக்கு உற்றலாம் என்று ரூமிற்கு எடுத்துவந்தவன் மீண்டும் நினைத்துக்கொண்டு அந்தப்பாலை நாயிக்கு ஊற்றினேன் பெரியக்குட்டி சற்று பொறுமைக்காத்தது சின்னக்குட்டி நாக்கு பாலில் அனலென சுழன்றது. சாப்பாடு சாப்பாடு சாப்பாடு அந்த நாய்குட்டியிடம் வேறு ஒன்றும் இல்லை, வாலும் நாக்கும் ஒரே வேகத்தில் சுழன்றது.உலகம் மறந்துவிட்டிருந்தது.
நாய்கள் உணவுக்காக குரைப்பதை, கடித்துக்கொள்வதைப்பார்த்து இருக்கிறேன்.இவ்வளவு ஆவலாய் வேகமாய் ஒரு ஜீவன் சாப்பிடுவதை முதன் முறையாகப்பார்த்தேன்.அங்கு ஒரு வேள்விதான் நடந்தது.“உணவைநோக்கிகுனிந்தஉடல்கள், உண்ணும்போதுஏன்இத்தனைபதற்றமாகஇருக்கிறார்கள், ஏன்இத்தனைவிரைவுகொள்கிறார்கள்?
அஸ்தினபுரியில்ஒருநாளும்உணவில்லாமலானதில்லை.ஆயினும்உணவுஅந்தவிரைவைக்கொண்டுவருகிறது.எல்லாவிலங்குகளும்ஆவலுடன்விரைந்துஉண்கின்றன.உணவுஅற்றுப்போய்விடும்எனஅஞ்சுபவர்களைப்போல. அதையேபீமன்சொன்னான்
“அவர்கள்அத்தனைபேருமேவிரைந்துஉண்கிறார்கள்.தீஅப்படித்தான்அன்னத்தைஅறிகிறது.இங்கிருந்துநான்பார்த்துக்கொண்டிருப்பேன்.எனக்குஇதுஒருபெரும்வேள்விக்கூடமென்றுதோன்றும்.”
நன்றி திரு.ஜெ.