அன்புள்ள ஜெ
நேற்றிரவு கடிதம் எழுதிவிட்டு மேலும் வாசித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய இன்னொரு எண்ணம் காந்தாரியைப்பற்றியது
காந்தாரி கண்டு வளர்ந்ததெல்லாம் தீ எரியும் பாலைவனத்தை. அவளுடைய மனம் அங்கே இருக்கும்போது மிகவும் கம்பீரமாக இருக்கிறது. அவள் மகத ராஜனுக்கு சீர் அனுப்பச் சொல்லும் இடம் அதைத்தான் காட்டுகிறது
ஆனால் அவள் பசுமை கொஞ்சும் கங்கைக்கரைக்கு வந்தபோது கொஞ்சம் கொஞமாக கடுமையாகிக்கொண்டே போகிறாள். கடைசியில் நாம் பார்க்கும் காந்தாரி ஒரு தாய்த்தெய்வம் போல கொடூரமாக இருக்கிறாள்
காரணம் அவள் பசுமையைப் பார்க்கவே இல்லை. அந்த கண்ணை மட்டும் கட்டாவிட்டால் அப்படி ஆகியிருக்கமாட்டாளோ என்று தோன்றியது
கணவன் மேல் உள்ள கண்மூடித்தனமாக அன்பால் கண்ணை கட்டினாள். அதன்பிறகு மகன் மீதுள்ள கண்மூடித்தனமாக அன்பினால் கண்ணில்லாமல் இருக்கிறாள்
அந்தக் கண்ணைக்கட்டிய தருணம் ஒரு பெரிய திருப்பு முனை. விரும்பியே இருட்டுக்குள் போனது அது
அந்த இடம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது
சிவராம்
மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதும் தொடர்